ஈ.வே.ராமசாமியை தமிழர் என அடையாளப்படுத்தும் விதமாக வெளியான நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது கடும் அதிர்ப்பதியை உண்டாக்கியுள்ளது இந்த சூழலில் இது குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில்.,
முதலில் தமிழர்களையும் அவர்களின் மொழியையும் இலக்கியங்களையும் இழிவு படுத்திப் பார்த்தார்கள்.. பின்னர் தமிழர்களை திராவிடர்களாக மாற்றி புதிதாக திராவிட இனம் என்ற டுபாக்கூர் இன அடையாளத்தை உருவாக்கினார்கள்.
அதன் மூலம் தமிழர்களை ஆண்டு சுகம் கண்டார்கள்..2009 தமிழின அழிவுக்குப் பின் தமிழர்கள் திராவிடத்தின் சூது என்ன என்பதை புரிந்து கொண்டு போட்டு வெளுத்ததின் விளைவு,சாதியால் தன்னை கன்னடர் என்று அறிவித்துக் கொண்ட ஈ.வெ. ராமசாமியாரை,
இவர் தமிழர் இல்லனா எவர் தமிழர் என்றும் தமிழர் கழகம்னு வச்சா பிறமொழியினர் நாங்க என்ன செய்வது என்று கேட்டு திராவிடத்தின் பெயரை மாற்ற மறுத்தவர்கள் எல்லாம் இப்போது ,திராவிட இயக்கம் தான் தமிழர் இயக்கம்னு கதற ஆரம்பித்திருக்கிறார்கள் திராவிட கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டு திரிபுவாதிகளின் கதறலை தமிழர்கள் நாம் வரவேற்போம் என குறிப்பிட்டுள்ளார் மேலும் அவரது மற்றொரு பதிவிலும் திராவிடர்கள் என சொல்லும் கூட்டத்தை கிழி கிழியென கிழித்து இருக்கிறார்.
பாலா திராவிட குரூப்பை நோக்கி எழுப்பிய கேள்விகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழக கலாச்சாரத்தை திராவிட கலாச்சாரமாக ஆளும் திமுக அரசு முன்னிறுத்தினால் அது ஆளும் அரசிற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடும் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.