Tamilnadu

அனுதாபத்தை வன்மமாக மாற்றிய பெங்களுரு அணி ! பங்களாதேஷ் அணியை போன்றது ஆர்.சி.பி

Bengaluru team
Bengaluru team

ஐபிஎல் தொடரின் 17ஆவது தொடரின் லீக் சுற்றுகள்  மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. மே 21ஆம் தேதி முதல் குவாலிஃபயர் போட்டியில் கேகேஆர்-சன்ரைசர்ஸ் அணியும்,மே 22 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றது. தொடர்ந்து  மே 24ஆம் தேதி குவாலிபயர் 2 போட்டியும் மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.  17 வருடங்களாக நடைபெற்று வரும்  ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணி தற்போது ஒன்பதாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு கப்பை கூட வாங்க முடியாமல் திணறி வருகிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடரை விட்டு லீக் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.


இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு  தகுதி பெற்றது ஆர்சிபி அணி. சென்னைக்கு எதிரான வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அத்துமீறியும்  நடந்துகொண்டார்கள் ஏதோ ஐ.பி.எல் கப்பை வென்றது போல் ஆணவத்தின் உச்சிக்கே சென்றார்கள். ஐபிஎல் தொடர் தொடங்கியபோதே ஆர்சிபி அணி பாவம் இந்தமுறை அவர்கள் கப் அடிக்கட்டும் என அனுதாப அலை வீசியது. ஆனால் அந்த அனுதாபத்தை வன்மமாக மாற்றியுள்ளார்கள் விராட் கோலியும் ஆர்சிபி அணி ரசிகர்களும்.. பெங்களூருவில் இந்த போட்டி முடிவடைந்த பிறகு ஆர் சி பி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை கடுமையாக கிண்டல் செய்து தகாத செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மேலும் ஆர்சிபி அணி ரசிகர்கள் பெங்களூர் நகர வீதியில் உற்சாகமாக அணிவகுப்பு நடத்தினர். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே பெரிய அளவில் ஆர் சி பி ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனை பார்க்கும்போது இதோ ஆர் சி பி கோப்பை தான் வென்று விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு கொண்டாடி தீர்த்தனர். பெங்களூரு ரசிகர்கள்  வெறும் கையில் தான் ஊர்வலம் போனார்கள். சிஎஸ்கே விடம் ஐந்து கோப்பை இருக்கிறது. வேண்டுமானால் ஆர்சிபி ரசிகர்களுக்கு சிஎஸ்கே தங்களிடம் இருக்கும் ஒரு கோப்பையை கொடுத்து ஊர்வலம் நடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்தது. மேலும் சிஎஸ்கேவின் கடைசி லீக் ஆட்டத்தில் விராட் கோலி செய்த அத்துமீறிய செயல்கள்  சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.  இதனால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும்  இம்முறை ஆர்சிபிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். ஆர்.சி.பி மீது இருந்த அனுதாபம் தற்போது கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் இல்லை.

இந்த நிலையில் ஆர்சிபி அணி தற்போது பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் இந்த இரு அணிகளும் விளையாடுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஐபிஎல் 2015 ஆம் ஆண்டு இதேபோன்று எலிமினேட்டர் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைஆர் சி பி வீழ்த்திருக்கிறது.குறிப்பிடத்தக்கது அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு குவாலிபையர் 2 போட்டியில் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது. அதிலும் வெற்றி வாகை சூடியுள்ளது ராஜஸ்தான் அணி. நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி,ஒரு போட்டி மழையால் ரத்து என்ற நிலையில் இருக்கிறது. அந்த கடுப்பில் இருப்பதால் இந்த முறை ஆர்.சி,பி அணியை தோற்கடித்து தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகி வருகிறது.ஆர் சி பி அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி இருக்கிறது.

இதனால் rcb வெற்றி பயணத்தை தொடருமா இல்லை ராஜஸ்தான் ராயல்ஸ் முட்டுக்கட்டை போடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பெங்களூருக்கு இனி கருணையும் இல்லை அனுதாபமும் இல்லை என முடிவெடுத்துவிட்டார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஆணவத்தில் ஆடியவன் அழிந்து தான் போவான் என பேசவும்  ஆரம்பித்து விட்டார்கள். அதே போல் விராட் கோலி வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இதே ஆக்ரோஷம் காட்டாமல் அவரின் பெர்பம்ன்ஸ் குறைந்தது என்றால் அவரின் ரசிகர்கள் கூட அவரை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆர்.சி.பி அணி இன்னும் பங்களாதேஷ் அணியை போன்றவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டார்கள்