Politics

முதல்வர் போட்ட போராட்ட நாடகம் ! மொத்தமாக போட்டு உடைத்த அண்ணாமலை! 39,339 கோடி எங்கே? புது நாடகம் அம்போ..!

annamalai and mk stalin
annamalai and mk stalin

மத்திய அரசு  தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு  நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நாடகம்தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில், 100 நாள் வேலை திட்டத்திற்காக, தமிழக வரலாற்றிலேயே, அதிகபட்சமாக 39,339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக கிராமப்புற மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், தமிழகத்தை விட குறைவான நிதியை பெற்றுள்ளன. 



அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும், ஏப்ரல் முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது


ஏற்கனவே தமிழகத்தில் இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் நடந்திருப்பதாக தககவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இதற்கு முன்னர் ஒரு நாளைக்கு ரூ.319 ஊதியம்  வழங்கப்பட்டது ஆனால் தமிழகத்தில்  பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக ரூ.270 மட்டுமே பயனாளிகளின் கைக்குப் போய்ச் சேர்வதாகச் சொல்கிறார்கள். இதுவுமில்லாமல் சில இடங்களில் போலியான ஆட்கள் மூலம் வருகைப் பதிவுகளை ஏற்படுத்தி மொத்தப் பணத்தையும் ஸ்வாகா செய்து கொண்டிருக்கிறார்கள்.


100 நாள் வேலைக்​குச் செல்​பவர்​களில் பெரும்​பாலானவர்​கள் கடப்​பாரை, மண்வெட்டி, பாண்டு சகிதம் போய் மரத்தடி நிழலில் அமர்ந்​திருந்​து​விட்டு பெயரளவுக்கு ஏதோ மண்ணைக் கொத்​தி​விட்டு மதி​யம் வீடு திரும்​பு​கின்​றனர். இதைத் தங்களுக்கு சாதக​மாக்​கிக்​கொள்​ளும் ஊராட்​சிப் பணியாளர்​களும், உள்ளாட்சி பிரதி​நி​தி​களும் இஷ்டத்​துக்கு ஊழல் செய்து பணத்​தைச் சுரண்​டு​கிறார்​கள்.என்ற குற்றசாட்டை முன்வைக்கிறார்கள். 


 பல ஊராட்​சிகளில் ஊராட்சி செயலருக்கு 20 அட்டை, தலைவருக்கு 20 அட்டை, மக்கள் நலப்​பணி​யாள​ருக்கு 10 அட்டை என 100 நாள் வேலை திட்​டத்​துக்கான அடையாள அட்டைகளை ஒதுக்​கி ​வைத்​துக் கொள்​கிறார்​கள். இந்த 50 அட்டைகளுக்​கும் அவர்களே வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்​களைப் பதிவேற்​றம் செய்​து​விடு​கிறார்​கள்.திட்​டத்​தின் உண்மையான பயனாளி​களுக்கு 4 மாதங்​கள் கூட ஊதி​யம் வராமல் இருக்​கும். ஆனால், வேலைக்கு வராத பயனாளி​களின் வங்கிக் கணக்​கில் பணம் உடனுக்​குடன் வரவாகி​விடும்.  அரசி​யல் தலையீடு​கள் இருப்​ப​தாலேயே இதுபோன்ற முறை​கேடுகளை தடுக்​க முடிய​வில்​லை


நூறு நாள் வேலைத் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 112 கோடி ரூபாய்  ஊழல் நடந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது..நூறு நாள் வேலைத் திட்ட நிதி, ஊரக வளர்ச்சித் துறையின் பிற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இத்திட்டத்திற்கு நாட்டிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளியுங்கள் என பாஜக தலைவர்  அண்ணாமலை ஆதரங்களை வெளியிட்டு முக ஸ்டாலினுக்கு கேள்விகளை முன் வைத்துள்ளார்