
ஆதவ் அர்ஜுனா கடந்த 2021 ஆம் தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக டெல்லியில் அவரது நண்பரான பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து வேலை செய்தவர்ஆனால் அங்கு உதயநிதி போட்டியாக ஆதவ் அர்ஜுனா வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக திமுக இருந்தது இதனால் ஆதம் அர்ஜுனாவை கண்டு கொள்ளவில்லை இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தாவினார் அங்கும் ஆதவ் அர்ஜுனாவை யாரும் மதிக்கவில்லை இதனால் விஜய் கட்சி தொடங்கியதும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார் அதனை தொடர்ந்து விஜய் கட்சியில் இணைந்தார்
இந்தநிலையில் அண்மையில் நடந்த விஜய் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது” என பேசியிருந்தார்.அதுமட்டுமில்லாமல் எங்கள் தலைவர் ரூ 1000 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அவர் என்ன பணம் சம்பாதிக்கவா அரசியலுக்கு வருகிறார்? மக்களுக்கு சேவை செய்ய வருகிறார். அந்த ரூ 1000 கோடி ஊதியத்தை உதறி தள்ளிவிட்டு வருகிறார். அது போல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை வைத்துக் கொண்டு ஒருவரின் பிடியில் திரையுலகமே இயங்கும்படி செய்கிறார்கள் என கடுமையாக விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசினார் அதற்ககு அண்ணாமலை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை தனது குருவி படம் மூலம் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதே விஜய்தான்.மேலும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது தங்கை கணவர் ஆதவ் அர்ஜுனா குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் மோசமான கருத்துகளுக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.அதோடு, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தனது அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய, தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்" என்ற அண்ணாமலையின் கூற்றையும் நான் ஆதரிக்கிறேன். ஆதவ் அர்ஜுனாவின் முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்” என ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். தொழில் முடிவுகளும் சரி, அரசியல் முடிவுகளும் சரி சுயமாக எடுக்கப்படுகின்றன. எனவே, இதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நாங்கள் கொண்டுள்ள தனியுரிமையையும், கருத்துக்களையும் மதிக்கிறோம். எனவே, தவறான கூற்றுகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும். எங்கள் குடும்பத்தை தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.