உலகம் முழுவதும் சமூக வலைத்தளமான முகநூல், யூடுப், வாட்ஸாப் போன்றவற்றின் வருகைக்கு பிறகு அரசியல்வாதிகள் பலரது உண்மை முகம் சாமானிய மக்களுக்கும் தெரியவருகிறது, பலரது பேச்சுக்கள் பேட்டிகள் போன்றவை சமூக வலைத்தளம் மூலம் பகிரப்பட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
திமுகவை சேர்ந்த சில இரண்டாம் தர பேச்சாளர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்த பெண் தலைவர்கள் குறித்தும், எதிர்க்கட்சி தலைவர்கள் குறித்தும் கடும் ஆபாச வார்த்தைகளால் பேச கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியது.
சமீபத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் புதுவை ஆளுநர் தமிழிசை குறித்து ஒருமையில் பேசிய வார்த்தைகள் தம்மை வேதனையடைய செய்துள்ளதாக தமிழிசை தெரிவித்தார் அது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, திமுக வை சேர்ந்த மேடை பேச்சாளர் ஒருவர், பாஜக தலைவர்கள் பெண் தலைவர்கள் குறித்து ஒருமையில் பேச அந்த வீடியோ சர்ச்சையை உண்டாக்க அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
இப்படி ஒரு புறம் இருக்க தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் கனிமொழி மேடையில் இருக்கும் போது திமுகவை சேர்ந்த மேடை பேச்சாளர் ஒருவர் MGR குறித்தும் அவர் நடித்த எனக்கொரு மகன் பிறப்பான் பாடலை கூறி, பெண் ஒருவர் பெயரை இணைத்து சர்ச்சையாக முகம் சுழிக்கும் வண்ணம் பேசினார்.
இது பலரையும் முகம் சுழிக்க செய்ய கனிமொழி பேச்சை நிறுத்த கூற அவர் நான் கோவையில் இருந்து வந்து ஒரு 10 நிமிஷமாவது பேசணும் என கூறி உரையை முடிக்கிறார். தற்போது இந்த வீடியோவை பகிர்ந்து இதுதான் திமுக மேடை பேச்சாளர்களின் உண்மையான முகம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.திமுக மேடை பேச்சாளர் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :-