Tamilnadu

இந்திய அளவில் கை கொட்டி சிரிக்கும் சம்பவத்தை செய்த திமுகவினர். வைரலாகும் வீடியோவால் டோட்டல் டேமேஜ்..!

india student
india student

இந்திய அளவில் தங்கள் அறிவை நிரூபிக்க போய் ஒட்டுமொத்த தமிழர்கள் மானத்தையும் கப்பல் ஏற்றி விட்டார்கள் திமுக உடன் பிறப்புகள் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று காட்டு தீயாக பரவி வருகிறது. அந்த செய்தியில் வீடியோ பதிவு ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது.


உக்ரைன் நாட்டை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் ஈரோப் நாடுகள் ரஷ்யாவிற்கு பாதுகாப்பு அச்சறுத்தல் கொடுப்பதாகவும் எங்கள் நாட்டின் இறையான்மையை காப்பாற்றி கொள்ள நாங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த போவதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்.

அன்றில் இருந்து தொடர்ச்சியாக 8 நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்த சூழலில் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகம் களத்தில் இறங்கியது.

பல்வேறு அதிரடி பேச்சு வார்த்தை மூலமும் 4 மத்திய அமைச்சர்களை நேரடியாக களத்திற்கு அனுப்பியும் மீட்டு வருகிறது இந்தியா, இந்திய தேசிய கொடியை காட்டினால் மாணவர்கள் எந்த வித சோதனையும் இன்றி விடுவிக்க படுகிறார்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய தேசிய கொடியை கைகளில் பிடித்து உயிர் பிழைத்து வருகிறார்கள் இப்படி எந்த நாடும் செய்யாத செயலை மோடியின் படை செய்து இந்தியர்களை விமானத்தில் அழைத்து வருகிறது.

இதனை அறிந்துதான் மம்தா பானர்ஜி கூட மத்திய அரசின் முழு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துவிட்டு ஒதுங்கிவிட்டார், உண்மை இப்படி இருக்க மத்திய அரசின் முயற்சிக்கு ஸ்டிக்கர் ஒட்டிய திமுகவினர் இப்போது பாடலையும் ஒட்டிவிட்டனர்.

உக்ரனில் இருந்து திரும்பும் மாணவர்கள் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என்ற பாடலை பாடி கொண்டே வருவதாக basha abdul என்ற திமுக உடன் பிறப்பு எடிட் செய்த வீடியோவை பரப்ப அதை உண்மை என்று சில திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர், இந்த வீடியோவையும் பாடலையும் பார்த்த பலர் கைகொட்டி சிரித்து விட்டனர்.

இந்திய அளவிலும் எப்படி தமிழகத்தை ஸ்டாலின் குழுவினர் ஏமாற்றி வருகின்றனர், இப்படித்தான் ஸ்டிக்கர் ஒட்டி அடுத்தவன் முயற்சியை தன் முயற்சியாக எண்ணுகின்றனர் என கிண்டல் அடித்து கமெண்ட் செய்வதுடன் கை கொட்டியும் சிரிக்கின்றனர். மாநில அரசின் அதிகாரம் என்ன? மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பது கூட தெரியாத உடன் பிறப்புகள் செய்த செயலால் இந்திய அளவில் பிரதமர் மெட்டீரியலாக கட்டமைக்கப்பட்ட ஸ்டாலின் பிம்பம் ஒரே செயலில் சுக்கு நூறாக வெடித்துள்ளது.