தமிழக அரசியல் களம் எப்போதும் பாஜக ஆதரவு பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை ரீதியில் மட்டுமே வளம்வந்த வண்ணம் உள்ளது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டு வருகிறது, நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற செய்தி வெளியானது முதல் தமிழகதின் சார்பில் யாருக்காவது மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில் மாலை மத்திய மந்திரிகள் பட்டியலில் தற்போதைய பாஜக தலைவர் L முருகன் பெயர் இடம்பெற்று இருந்தது ஆச்சர்யதை உண்டாக்கியது, மத்திய இணை அமைச்சர் பொறுப்பு தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு வழங்கபட்டது பட்டியல் சமூகத்தைசேர்ந்த ஒருவருக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கியது மட்டுமல்லாமல், மத்திய அமைச்சரவையிலும் இடம் அளித்து சமூக நீதியை நிலை நாட்டி இருக்கிறது பாஜக.
அதே நேரத்தில் L முருகன் குறித்த அரசு குறிப்பில் கொங்கு நாடு - தமிழ்நாடு என இடம்பெற்று இருந்தது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது தமிழ் நாட்டை பிரிக்கும் செயல் இதுவென்று திமுக ஆதரவு கட்சிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர், இந்நிலையில் இந்தியாவை பிரிக்கும் வண்ணம் தனி தமிழ்நாடு என கோஷம் போட்ட குழுவினருக்கும், ஒன்றிய அரசு என பேசிவந்த சிலருக்கும் ஆப்பு வைத்தது மத்திய அரசு.
நீங்கள் ஒன்றிய அரசு என கூறுவது உங்கள் உரிமை என்றால் கொங்கு நாடு என கூறுவது எங்கள் உரிமை அதுமட்டுமல்ல சேர சோழ பாண்டிய நாடுகளின் கூட்டமைப்பு தான் தமிழகம் என குறிப்பால் உணர்த்தியுள்ளது , இப்போது பலரும் தங்களுக்கு தனியாக கொங்கு நாட்டை கொடுங்கள் நாங்கள் மத்திய அரசுடன் ஒன்று சேர்ந்து, நவோதையா பள்ளிகள், பெட்ரோல் விலை குறைப்பு, மேலும் பல சலுகைகளை பெறுவோம் குறிப்பாக இந்து மதத்தை விமர்சனம் செய்வதை ஒடுக்குவோம் என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஒன்றிய அரசு, தனி தமிழ்நாடு என பிரிவினையை விதைக்கும் விதமாக பேசிவந்த குழுவினருக்கு கொங்கு நாடு என குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளது மத்திய அரசு, இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் மத்திய அரசு நினைத்தால் மாநிலங்களின் எல்லயை மாற்றி அமைக்கவும் மாநிலங்களை பிரிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.