Tamilnadu

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு அண்ணாமலை முதல் அதிரடி உத்தரவு.. இது வேற லெவல்

annamalai bjp
annamalai bjp

தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை அக்கட்சித் தலைமை நேற்று நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது, இந்த இந்த அறிவிப்பு அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து அண்ணாமலையை அக்கட்சித் தலைமை தலைமை பொறுப்பிற்கு மாநில தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் மாநில தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார் அண்ணாமலை இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட போகிறார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது, அண்ணாமலை முதல் முதல் முதலாக அண்ணாமலை முதல் முக்கிய மாற்றங்கள் ஈடுபட போவதாகவும் அதில்  முதலான மாற்றம் திமுகவினர் மூலம் அடக்குமுறைக்கு உள்ளாகும் பாஜகவினர் மற்றும் பாஜக ஆதரவாளர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய ஒரு குழுவை  அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக மாவட்ட அளவில் தனித்தனியாக வழக்கறிஞர்கள் குழு அமைக்க இருப்பதாகவும் அதனை நேரடியாக அண்ணாமலை கண்காணித்து வர இருப்பதாகவும் கூறப்படுகிறது, தமிழக ஊடகங்கள் பல திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் முக்கிய சில விஷயங்களை திமுகவிற்கு எதிராக உள்ள முக்கிய சில விஷயங்களை வெளியிட தயங்குகின்றன, இது சமூக வலைதளம் மூலம் மட்டுமே மக்களுக்கு வெளிப்படையாக சென்று சேருகிறது, வழு சமூகவலைதளங்கள் மூலம் கொண்டு செல்பவர்களை மிரட்டவும் காவல்துறை மூலம் கைது செய்யவும் திமுக திட்டமிட்டு வருவதை அறிந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்சி பாஜகவினர் பக்கம் நிச்சயம் நிற்கும் எனவும் தொடர்ந்து சகோதர சகோதரிகள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை தெளிவாகவும் சுதந்திரமாக எடுத்து தெரிவிக்கலாம் என அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றி கடந்த தேர்தலில் ஒழுங்காக முறையாக செயல்படாத மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட இருப்பதாகவும் அவர்கள் குறித்த தகவல்களை மண்டல பொறுப்பாளர்கள் மாநில நிர்வாகிகள் மூலம் அறிக்கை பெறப்பட்டு அதன் மூலம் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவை தவிர்த்து தமிழக ஊடகங்கள் மூலமும் யூடியூபில் மூலமும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும் மத்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக போலி செய்திகளை பரப்பி வரும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள்  சேனலை முடக்கவும் மேலும் இது போன்ற போலி செய்திகளை பரப்பும் நபர்களை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட தனி குழுவை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பாஜகவில் அரங்கேறி இருக்கும் முக்கிய மாற்றங்கள் தவிர்த்து கரூர் மாவட்ட அளவில் இன்னும் பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது, கரூர் மாவட்டத்தில் தான் பெரிய தலைவர் என்ற அடையாளத்தில் சுற்றிவரும் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு  குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அவர் செய்த முறைகேடுகள் கொள்ளைகள் போன்றவற்றை வெளியுலகிற்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 இதன் வெளிப்பாடுதான் இன்று கரூர் மாவட்டத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அதனை காவல்துறை மூலமும் மாவட்ட ஆட்சியர் மூலமும் செந்தில்பாலாஜி அடக்க நினைத்த ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது, செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு கரூர் மாவட்டத்தில் பல்வேறு கொண்டாட்டங்களில் அக்கட்சியினர் ஈடுபட்டபோது இதே மாவட்ட ஆட்சியர் காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேள்வியும் பாஜகவினர் எழுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் இடையே பெரிதும் வரவேற்பை பெற்ற நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் கலக்கத்தை உண்டாக்கி இருப்பது  கரூர் மாவட்டத்தில் அண்ணாமலை நியமனத்தை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்ததில் இருந்து   நிதர்சனமாகத் தெரியவந்துள்ளது.