24 special

அதிகாலையிலேயே களம் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர்...! வெளிவந்த பரபரப்பான உண்மைகள்....!

Annamalai,
Annamalai,

தேசிய புலனாய்வு அமைப்பு இன்று காலை தமிழ்நாட்டில் 44 இடங்களில் ரெய்டில் இறங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் பின்னணியை விசாரித்த பொது திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. திருப்புவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு சமூகத்தினர் மதமாற்றம் செய்ததை தட்டிக் கேட்ட நிலையில் அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்டார் . மேலும் இந்த வழக்கு தொடர்புடைய பதினாறு பேரை கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. 

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, அசாருதீன், ரிஸ்வான், சர்புதீன்  ஆகியோர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ராமலிங்கம் வழக்கு தொடர்பாக தமிழகத்தில் திருச்சி கோவை கும்பகோணம் மதுரை நெல்லை திருப்பூர் மயிலாடுதுறை உள்ளிட்ட 24க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இன்று காலை 6:00 மணி முதல் சோதனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சி தலைவர் முபாரக் இல்லத்தில் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும்  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் டி பி ஐ கட்சியின் மாநில பொறுப்பாளரான ரஷீத் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரது வீட்டிலும்  விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது மட்டும் இல்லாமல் கோவை மாவட்டத்தில் அப்பாஸ் என்பவர் வீட்டில் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் தேசிய புலனாய்வு  அமைப்பினரால் பல்வேறு ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டன. 

முக்கிய ஆவணங்களாக அவரது வீட்டில் ஆதார் கார்டு பான் கார்டு மொபைல் போன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை 90 ஆயிரம் பணம் என அனைத்தையும் கைப்பற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இவரது வீட்டில் மட்டும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்ற நிலையில் 12 மணிக்கு நேரில் ஆதராகுமாறு தேசிய புலனாய்வு அதிகாரிகளால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருப்புவனம் ஜின்னா மற்றும் திருமங்கலக்குடி முகமது நபி  குலாம் உசேன் சாகுல்ஹமீது உள்ளிட்டோர் தலைமறைவான நிலையில் அவர்களைத் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களின் வீட்டில்  சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளதால்  காலை முதல் சோதனை நடைபெறும் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தமிழகம் தேசிய விரோதிகளின் புகலிடமாக மாறியிருக்கு என பற்ற வைத்த விவகாரம் வேறு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரெய்டுக்கு பின்னர் அண்ணாமலை விரைவில் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரைக்கு தொடர்பு இருக்கா என விசாரித்த பொழுது இல்லை என்றே தகவல்கள் கிடைத்தன மேலும் இந்த ரெய்டு முழுக்க முழுக்க திருபுவனம் ராமலிங்கம் கொலையை மையப்படுத்தியே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் ரெய்டில் என்னென்ன சிக்கின, மேலும் தகவல்கள் என்ன என்பது பற்றியும் சோதனையின் முடிவில் உண்மைகள் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.