1999 ஆம் ஆண்டில் மிஸ் சென்னை போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று அதன் மூலம் நடிப்பதை ஆர்வம் கொண்டு அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்த வந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் முதல் முதலாக இந்தி மொழியிலும் மீத்தா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் தமிழில் சூர்யாவுடன் சேர்ந்து முதல் முதலாக மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டில் நடித்திருந்தார். அதன் பிறகு பிரபல நடிகரான விஜய் உடன் சேர்ந்து கில்லி திரைப்படத்தில் நடித்தார். சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்த திரைப்படம் என்றால் அது கில்லி தான். திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆக வெற்றி பெற்று இன்று அளவிலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் பல வருடங்கள் கழித்து கில்லி திரைப்படம் சமீபத்தில் கூட மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்தது. இவர்கள் இருவரின் காம்போ ரசிகர்களுக்கு பிடித்த போன காரணத்தினால் அதன் பிறகு குருவி போன்ற திரைப்படங்களில் சேர்ந்து நடித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷா மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். பல வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் நடித்த லியோ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி மற்றும் தக் லைப் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கும் மேல் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் திரிஷா சமீப காலமாக பல சர்ச்சைகளில் மாட்டி வருகிறார். முதலில் பிரபல தெலுங்கு நடிகரான ராணா டகுபதியுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்று கூறி பிரிந்து விட்டனர். அதன்பிறகு பிரபல தொழிலதிபரான வருண் மணியனை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து திருமணம் நின்றுவிட்டது. இவ்வாறு தொடர்ந்து திரிஷா பற்றிய கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தற்பொழுது மீண்டும் தற்பொழுது விஜய் மற்றும் திரிஷாவை வைத்து சர்ச்சை எழுந்து வந்தது.
சமீபத்தில் விஜயின் பிறந்தநாள் முடிந்தது. அப்போது நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறி அவருடன் எடுத்த செல்பி ஒன்றை தனது இணையதள பக்கத்தில் த்ரிஷா பதிவிட்டிருந்த நிலையில் இவர்கள் இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருவதாகவும் இவர்கள் அடிக்கடி ஒன்றாக சந்தித்து வெளியில் செல்வதாகவும் பல வதந்திகள் எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து நடிகை திரிஷா மற்றும் விஜய் அமைதி காத்து வந்த நிலையில் அதன் பிறகு திரிஷா மற்றவர்களின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தனது instagram பக்கத்தில் பதிவிட்டு பரவி வந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறைமுகமாக பதிவு ஒன்றினை செய்துள்ளார். இது குறித்த செய்தி தற்பொழுது இணையத்தில் பரவி படு வைரல் ஆகி வருகிறது.