தமிழகத்தில் மீண்டும் நிச்சயம் ஆட்சியை தொடர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் கட்சியின் முக்கிய நிர்வாகிளிடம் வலியுறுத்தி வருகிறார், அதற்காக பாஜக அதிமுக கூட்டணி ஒன்று இணையாமல் இருக்கும் பணிகளை தெளிவாக திமுக தலைமை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவ்வப்போது கள நிலவரம் என்ன என்பதை உளவு அமைப்புகள் மூலம் நேரடியாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கைகள் மூலம் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் உளவுத்துறை இரண்டு விதமான அறிக்கைகளை அளித்து இருக்கிறதாம்.
ஒன்று தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீதான மக்கள் பார்வை மற்றும் எதிர் கட்சிகள் மீதான மக்கள் பார்வை என்ன என முழுமையாக அலசி ஆராய்ந்து தெரிவித்து இருக்கிறார்களாம் தமிழகத்தில் தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணிக்கு இணையான போட்டியை ஒன்றுபட்ட அதிமுக, பாஜக, பாமக இன்னும் இதர கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் திரண்டால் மட்டுமே திமுகவிற்கு எதிரான வலுவான போட்டியை கொடுக்க இயலும்.
மேலும் பாஜக இல்லாமல் அதிமுக தனித்து போட்டியிட்டால் நிச்சயம் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் எப்படி குஜராத் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மீ என மும்முனை போட்டி ஆளும் கட்சியான பாஜகவிற்கு சாதகமான சூழலை உண்டாக்கி இருக்கிறதோ அது போல் பாஜக மற்றும் ஒன்று பட்ட அதிமுக இவர்கள் இணையவில்லை என்றால் நிச்சயம் அது திமுகவிற்கு சாதகமான சூழலை கொடுக்கும் என கொடுத்து இருக்கிறது உளவுத்துறை.
இது முதல்வருக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில் உளவுத்துறை கொடுத்த மற்றொரு தகவல் முதல்வருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது... தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே செல்வாக்குடன் இருந்த பாஜக தற்போது கிராமங்களில் குறிப்பாக வளரும் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை கொடுக்கும் கட்சியாக மாறி இருக்கிறது
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை எதிக்கட்சியான அதிமுகவினரிடம் கொண்டு செல்வார்கள் ஆனால் தற்போது அது மாறி பாஜகவினரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் எடுத்து செல்கிறார்கள், பல அரசு அதிகாரிகளும் திடீர் பாஜக ஆதரவாளர்களாக மாறி இருப்பது தெளிவாக தெரிகிறது அவர்கள் மூலம் தான் பல்வேறு தகவல்கள் கசிய விட படுகின்றன.
மேற்கு வங்கத்தில் எங்குமே இல்லாத பாஜக, அரசு ஊழியர்களிடம் பெற்ற நம்பிக்கையை தொடர்ந்து அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக வளர்ந்து இருக்கிறது இதே போன்று தமிழகத்திலும் நிச்சயம் மாற்றம் உண்டாவதை நோக்கியே நகர்வுகள் இருக்கின்றன அதை நோக்கிதான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் செயல்பட தொடங்கி இருப்பதாக நீண்ட அறிக்கையை கொடுத்து இருக்கிறதாம் உளவுத்துறை.
எதற்கெடுத்தாலும் பாஜக செயல்பாடுகளை விமர்சனம் செய்த காரணத்தால் இன்று தமிழகத்தின் மூளை முடுக்கு எல்லாம் திமுகவே கொண்டு சென்று விட்டதாகவும் கூறி இருக்கிறதாம் பாஜக நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வந்த உளவு அமைப்பை சேர்ந்தவர்கள்.இது முதல்வருக்கு மட்டுமின்றி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறதாம்.
இது ஒரு புறம் என்றால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் தொடர் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அது குறித்து அனுமதி பெற டெல்லி சென்று இருப்பதாகவும் இது குறித்த விரிவான திட்டமிடல் என்ன என தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகிறதாம் மாநில உளவுத்துறை என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
அண்ணாமலையின் டெல்லி பயணத்தின் முழுமையான பின்னணி என்ன என்று அடுத்த வீடியோவில் விரிவாக தெரிவிக்க இருக்கிறோம் மறக்காமல் TNNEWS24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.