sports

மேட்சிற்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட்டர்ஸ் இந்தியர்களை கடுப்பேற்ற செய்த செயல் பொதுவெளியில் சொல்லிய ஆங்கர் !

india vs pakistan
india vs pakistan

இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை யுத்தம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உணர்வுப்பூர்வமாக கட்டிப்போடும் கிரிக்கெட் திருவிழா.பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை தொடர்களில் முழுமையாக வீழ்த்தி தோல்வியை சந்திக்காதா அணியாக இந்தியா வீறுநடை போடுகிறது.


20 ஓவர், 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளது.1992 முதல் 2019 வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை இரு அணிகளும் மோதியுள்ளன இதில் அனைத்திலும் இந்தியாவிற்கே வெற்றி முகம்.

அதே போல் 2007 முதல் 2016 வரை நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்து முறை இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஐந்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளது.சர்வதேச அளவிலான டி 20 போட்டிகளில் இரு அணிகளும் 8 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர் இதில் 7 போட்டிகளில் இந்தியா வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

உலகக் கோப்பையில் இரு அணிகளின் முதல் சந்திப்பாக 2007 ம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டி அமைந்தது.விறுவிறுப்பின் உச்சம் தொட்ட அந்த போட்டி சமனில் முடிய சூப்பர் ஓவரில் வென்ற இந்தியா, ஒருநாள் உலகக் கோப்பை போட்டி சாதனையை டி 20 போட்டிகளிலும் தக்கவைத்தது. 2012 ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் வென்ற முதலும் கடைசியுமாக வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று துபாயில் நடைபெறும் T20 உலகைக்கோப்பை போட்டியில் இந்தியா  பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன , இந்த போட்டிக்கு முன்னர் இந்திய வீரர்களை கடுப்பேற்றும் விதமாக பாகிஸ்தான் வீரர்கள் அந்த நாட்டு கொடியை நடுவில் ஊன்றி  பயிற்சி செய்துள்ளனர் . பொதுவாக இதுவரை எந்த நாட்டு அணிகளும் தங்களது தேசிய கொடியை பயிற்சிக்கு முகாலத்தில் ன்னர் மைதானத்தில் வைத்து பயிற்சியில் ஈடுபட்டது இல்லை .

ஆனால் இப்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை மன ரீதியாக மாற்ற இதுபோன்ற முறையில் ஈடுபட்டு இருக்கலாம் , நாங்கள் விளையாடிய காலத்தில் இதுபோன்று இருந்தது இல்லை என தனியார் தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்யும் முன்னாள் வீரர் பத்ரி தெரிவித்துள்ளார் .