தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் “சமூகநீதிக் கண்காணிப்பு குழ“ அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும்.
இந்த பணிகளை மேற்கொள்வாடு இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கீழ்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களளை நியமனம் செய்து “சமூகநீதிக் கண்காணிப்பு குழுவினை“ அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எனவும் சுப. வீரபாண்டியன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளதாக தெரிவித்தது.இந்த குழுவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது சமூகநீதி கண்காணிப்பு குழு என்று கூறுகிறார்கள் ஆனால் இந்த குழுவில் பெண்களுக்கு வாய்ப்பே இல்லை, இதுதான் திமுக அரசாங்கத்தின் சமூக நீதியா?
ஆட்சிக்கு முன்னாள் ஒரு பேச்சு ஆட்சிக்கு பின்னால் ஒரு பேச்சு என வறுத்து எடுத்தனர், இன்னும் வெளிப்படையாக பெண்கள் பலர் குழுவிற்கு எதிர்ப்பும் பதிவு செய்தனர்.இந்த எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டு புதிதாக பெண் உறுப்பினர் ஒருவரை சேர்த்து மாற்றம் ஒன்றை செய்துள்ளனர், இந்த குழுவில் புதிதாக மருத்துவர் சாந்தி இணைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த குழு முழுக்க முழுக்க திமுக ஆதரவாளர்களை கொண்ட குழு எனவும், தேர்தலுக்கு முன்னர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இப்படி பல குழுக்களை மாநில அரசாங்கம் அமைத்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.