Tamilnadu

என்ன படம் பார்க்கவேண்டும் என்ற கேள்விக்கு "அண்ணாமலை" கொடுத்த பதில்..?

Karti chidambaram and annamaali
Karti chidambaram and annamaali

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி பரபரப்பை உண்டாக்கின 5-ல் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 5 மாநிலங்களிலும் படு தோல்வி அடைந்துள்ளது. ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மீ கட்சியிடம் பறி கொடுத்துள்ளது காங்கிரஸ்.


பாஜக ஆட்சியில் இருந்த உத்திர பிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது, உத்திர பிரதேச தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்க படும் சூழலில் அங்கு மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்து இருப்பது எதிர்க்கட்சிகளின் கனவை கனவாக மாற்றியுள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் படு தோல்வியை சந்தித்த சூழலில் 5 மாநில தேர்தலில் ஏதேனும் மாற்றம் வரும் என்று எண்ணி இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர் பலர் இனி காங்கிரஸ் கட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டனர்.

இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ட்விட் ஒன்றிணை போட்டிருந்தார் அதில் நெட்ப்ளீக்சில் பார்க்க நல்ல திரைப்படம் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என கேட்டு இருந்தார், இதற்கு பலரும் பலவாறு கமெண்ட் செய்து இருந்தனர்.

இந்த சூழலில் தனியார் ஊடகம் ஒன்றில் நேரலையில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்ப பட்டது, கார்த்தி சிதம்பரத்திற்கு நீங்கள் எந்த படத்தை பரிந்துரை செய்வீர்கள் எனவும் கேள்வி எழுப்ப பட்டது அதற்கு அண்ணாமலை தெரிவித்த பதில் பின்வருமாறு :-

 "நல்ல படமாக பார்க்கட்டுமே. எதுவாக இருந்தாலும் அரசியல் எல்லாம் தாண்டி ஒரு கட்சி கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களைப் பற்றி தவறாக பேசுவது மாண்புக்கு சரியாக இருக்காது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பப்ம், காங்கிரஸ் கட்சியைத் தாக்குகிறோமே தவிர அதன் தலைவர்களைத் தனி மனிதர்களைத் தாக்குவதில்லை. அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். நாளையில் இருந்து மக்களுக்கு பணி செய்யத் தொடங்கட்டும்" என்று தெரிவித்தார். அண்ணாமலை கொடுத்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.