Tamilnadu

உபி தேர்தலில் "ராஜ்நாத் சிங்" மகன் பெற்ற வாக்கு அதிர்ச்சியில் உறைந்த கட்சிகள்..!

Rajnath Singh
Rajnath Singh

உத்திர பிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பெற்று வாக்குகள் உத்திர பிரதேசத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில் அரிதி பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில், நொய்டாவில் விதான் சபா தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் சாதனை வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். 


பாஜக வேட்பாளர் பங்கஜ் சிங் 1,81,513  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  இது இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.  அவர் 2,44,091 வாக்குகள் பெற்ற நிலையில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுனில் சவுத்ரி 62,722 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் கிருபா ராம் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.  இதற்கு முன், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர மாநில-சட்டமன்றத் தேர்தலில், NCP தலைவர் அஜித் பவார் 1.65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை தோற்கடித்து, சட்டமன்றத் தேர்தல்களில் புதிய சாதனையைப் படைத்தார்.

உ.பி-சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 10ம் தேதி கவுதம் புத் நகர் மாவட்டத்தில் நடைபெற்றது.  பங்கஜ் சிங் நொய்டா விதான் சபா தொகுதியின் எம்.எல்.ஏ.  வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்தார். பதிவான வாக்குகளில் பங்கஜ் சிங் 70.17% வாக்குகளையும், சுனில் சவுத்ரி மற்றும் கிருபா ராம் சர்மா முறையே 18% மற்றும் 4.68% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பங்கஜ் சிங், பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன்.  2017 உபி சட்டப் பேரவைத் தேர்தலில் நொய்டா விதான் சபா தொகுதிக்கு பங்கஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் துணைத் தலைவராக உள்ள இவர், 2002ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சட்டமன்றத் தேர்தல்களின் தேர்தல் முடிவுகளின்படி, ஐந்து மாநிலங்களில் நான்கில் பாஜக வெற்றிபெற்றுள்ளது அதேசமயம் 5 மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் முற்றிலுமாக அகற்றப்பட்டது.  உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று வரும் நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கிறது.