உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்டினியா என வடிவேல் திரைப்படம் ஒன்றில் கேட்பார் அதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ் காலத்தில் அரங்கேறியுள்ளது, எழுத்தாளர் மாரிதாஸ் கைதை வரவேற்று ஆர்ப்பாட்டம் கிண்டல் செய்துவந்த தரப்பு இப்போது வளர்மதி என்ற இடது சாரிய போராளி கைது செய்யபட்ட நிலையில் கதறி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதிகள் எடுத்து தங்க வைத்து உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பூந்தமல்லி அருகே விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட பெண்கள் 200 பேருக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாகவும், அந்த பெண் ஊழியர்கள் கெட்டுபோன உணவு சாப்பிட்டு இறந்து போனதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டது. இந்த வதந்தி காட்டுத்தீயாய் பரவ ஆத்திரமடைந்த 1000-க்கும் அதிகமான ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வட்டம்பாக்கம், ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த பொய்யான தகவல் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் தெரிவித்தார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 16 மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியது யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சேலம் வளர்மதி தனது பேஸ்புக் பக்கத்தில் "சென்னை சுங்குவார் சத்திரத்தில் உள்ள பன்நாட்டு தொழிற்சாலை Foxconn நிறுவன விடுதியில் பெண்கள் தொழிலாளர்கள் உணவு உண்ட 100 க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 8 பெண் தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும் அவர்களின் சடலத்தை தொழிலாளர்களிடம் காட்ட மறுக்கப்படுகிறது. Foxconn தொழிலாளர்களுக்கு ஆதரவாக சுங்குவாசத்திரத்தில் அணித்திரள்வோம்" என கூறி பொய்யான தகவல்களை பதிவிட்டதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.மேலும் போராட்டதிற்கு சென்ற வளர்மதியை நேற்றுமாலை கிண்டி போலீசார் தடுத்தி நிறுத்தினர்.
இந்த நிலையில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக எம்ஜிஆர் நகர் போலீசார் சேலம் வளர்மதி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஏற்கனவே கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவாகரத்தின் போது வளர்மதி போராட்டத்தை தூண்டியதாக அப்போதே காவல்துறை கண்காணிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் வளர்மதி கைது செய்யபட்டதற்கு இடதுசாரிகள் உட்பட பலர் விமர்சனம் செய்துவந்த நிலையில் இதே வாய்கள் தான் மாரிதாஸ் கைதின் போது குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என அறிவுரை வழங்கியவர்கள் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என மாரிதாஸ் ஆதரவாளர்கள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.