Tamilnadu

பிரபல எழுத்தாளர் தெரிவித்த முக்கிய தகவல் என்ன நடக்கிறது தமிழக ஊடகங்களில்?

Tamil media
Tamil media

பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்  தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருப்பதுடன் அதற்கான காரணத்தையும் அவரே முன்வைத்துள்ளார் அவை பின்வருமாறு :- காஷ்மிரில் 'ஆசிபா' என முன்பு பொங்கிய ஊடகங்கள் இப்பொழுது கொடைக்கானலில் ஒரு சிறுமி கொல்லபட்ட நிலையில் நினைவு தப்பி கோமா நிலைக்கு சென்றுவிட்டன.


இந்து மத மாந்தீரிகள் எது செய்தாலும் பகுத்தறிவு பேசும் கூட்டத்தை ஒரு இஸ்லாமிய மாந்திரிகன் நரபலி கொடுத்திருக்கும் நிலையில் கண்ணுக்கெட்டிய தூரம் காதுக்கெட்டிய தூரம் ஏன் காலுக்கெட்டிய தூரம் வரை காணவே இல்லை.

இந்தியாவின் மிகபெரும் பணக்கார சபையான தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான பள்ளியில் மூன்று மாணவர்கள் இறந்த நிலையில் அச்சபையின் தலமை பாதிரி வாயே திறக்கவில்லை, உரிய நஷ்ட ஈடும் கொடுக்கவில்லை இதையெல்லாம் பற்றி ஒருவரும் பேசவில்லை ஏன் என்றால் தென்னிந்திய திருச்சபைக்கும் திமுகவுக்கான உறவு பற்றி ஸ்டாலினே பேசியிருக்கும் காட்சியெல்லாம் உண்டு.

முன்பு ஒரு தீபாவளியில் ஒரு கிறிஸ்தவ சிறுவன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்தபொழுது ஒப்பாரி வைத்து தீபாவளியினை கெடுத்த ஊடகங்களையும், அள்ளி கொடுத்த கட்சிகளையும் இந்த நெல்லை பள்ளி சாவில் காணவே இல்லை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அதன் போக்கில் இருக்கின்றது

இந்து சமூகம் எப்படியெல்லாம் மிகபெரிய சூழ்ச்சிவலையில் அபலையாய் சிக்கி ஊமையாய் அடிவாங்கி கொண்டிருக்கின்றது என்பதை நடக்கும் காட்சிகளெல்லாம் காட்டி கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார் இந்த சூழலில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் தமிழக ஊடகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.