Cinema

விஜய்க்கு அடுத்து அஜித் அரசியலுக்கு வருவாரா?? நடிகர் அஜித் குமாரிடம் நேரடியாக இது குறித்து பிரபல நடிகர் அவரிடம் கேட்டதற்கு சரியான பதிலடி கொடுத்த அஜித்!!

VIJAY, AJITH
VIJAY, AJITH

சினிமாவில் நடிக்கும் பிரபல நடிகர்கள் தற்பொழுது தொடர்ந்து அரசியல் வருவது என்பது ட்ரெண்டான ஒன்றாகவே மாறிவிட்டது. எம்ஜிஆர் தொடங்கி அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த் என பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு அரசியலில் கால் பதித்தனர். இதன் பிறகு தற்போது சினிமா உலகில் அதிக அளவில் ரசிகர்களை வெற்றி ஒரு பிரபல நடிகராக வலம் வந்து கண்டுள்ள விஜய் அரசியலில் தற்போது நுழைந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரையும் வைத்துள்ளார். மேலும் தனது கட்சிக்கு தொடர்ந்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்  விஜய்!! இவரை தொடர்ந்து அதன் பிறகு நடிகர் விஷாலின் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். இவ்வாறு தொடர்ந்து பிரபலங்கள் அரசியலுக்கு வருவது என்பது தற்பொழுது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.


இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வருவாரா என்று பலரும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து தற்பொழுது சினிமாவில் அஜித்துடன் பல திரைப்படங்களில் நடித்த பிரபலம் ஒருவர் நேரடியாக அஜித்திடம் இது குறித்து கேட்டபோது அவர் அளித்த பதில் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது!!இதுவரை 61 திரைப்படங்களுக்கு மேல் நடித்து அதிக அளவில் ரசிகர்களை பெற்று ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக இருந்து வரும் பிரபல நடிகர் தான் அஜித் குமார். இவர் 1990களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து கடின உழைப்பால் இன்று சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பெற்று உள்ளார். இதனை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று சமூகத்தில் அவரின் அரசியல்வாதிகள் இணையத்தில் அஜித் பேனாவுடன் எழுதும் ஒரு புகைப்படத்தை நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலை வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த பதிவானது சமீபத்தில் வெளியாகி படும் வைரலான நிலையில் பலரும் அஜித் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தனர். இயல்பாகவே நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வேறு எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் கலந்து கொள்ள மாட்டார். பெரிதும் புகழ்ச்சியை விரும்பாத நடிகர்களின் வரிசையில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் தற்பொழுது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துட்டு தொடர்ந்து சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் எந்த அளவிற்கு போட்டி இருந்ததோ அதே அளவிற்கு அஜித் அரசியலுக்கு வந்தால் போட்டியிருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்துடன் பல திரைப்படங்களில் நடித்து வந்தவரும், அஜித் மாதிரி நீ நெருங்கிய நண்பருமான ரமேஷ் கண்ணா நேரடியாக அஜித் அவர்களிடம் அரசியலுக்கு விஜய் வந்துவிட்டார் நீங்கள் எப்போது வரப் போகிறீர்கள் என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார்!! அவர் கேட்ட கேள்விக்கு  அஜித் மூடிட்டு போ!! என்று ஒரே வார்த்தையில் ஒரு புள்ளி வைத்து விட்டாராம். இவ்வளவுதான் அஜித்திற்கு அரசியல் மீது உள்ள ஆர்வம் என்றும், அஜித்தை பொருத்தவரை ஒரு குடிமகனாக தவறாமல் வாக்களிப்பது மட்டுமே கடமையாக நினைத்து வருகிறார் என்று பேட்டி ஒன்று ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்!! இதனை தொடர்ந்து அஜித் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.