கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.அந்த ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர் இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது எனவும் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ உயர் அதிகாரிகள் பலர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இந்தியர்கள் மனதில் வேதனையை உண்டாக்கியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது.உடல்கள் தீயில் கருகியுள்ளதால் இறந்தது யார்? யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குன்னூர் விபத்தில் சிக்கிய எம்.ஐ.17வி5 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது, உலக அளவில் பயணத்திற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது, 13 ஆயிரம் கிலோ எடையை தாங்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்த சூழலில் ஸ்டான்லி ராஜன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு:-
தமிழகவரலாற்றில் மிகபெரிய சோக சம்பவம் ஒன்று அடுத்து பதிவாகியுள்ளது, இது அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்படுத்தும் விஷயம், மிக பெரிய எச்சரிக்கையினையும் மாபெரும் சந்தேகங்களையும் தொடங்கி வைத்திருக்கும் விஷயம், தமிழகம் குன்னூர் பகுதிக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த முப்படைகளின் கூட்டு தளபதி ஜெனரல் பிபின் ராவத் குடும்பத்தோடு உயிரிழந்திருப்பது என வரும் தகவல் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஈட்டி பாய்ந்த தருணம்.
அவர் இந்திய படையின் உச்ச தளபதி, சீனாவுடனான இந்நேர முறுகலில் அவரின் ஒவ்வொரு அசைவும் தேசத்தின் பாதுகாப்பை நிர்மானித்தது ராணுவத்தின் உச்ச நிலையில் உள்ள ஒருவரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக வாய்ப்பில்லை வாய்ப்பிருந்தால் இந்திய ராணுவத்தில் ஏதோ சரியில்லை என்பதுதான் விஷயம்.
ஆயிரம் அதிர்ச்சிகள் நெஞ்சி மோதி கொண்டிருக்கின்றன, இது அசாதாரண சூழல், இதனால் உரிய விசாரணை முடியும் வரை அமைதிகாப்பதுதான் சால சிறந்தது, எனினும் மிக பெரிய அச்சுறுத்தல் இங்கு புகுந்துவிட்டது நிஜம், தேசம் அவசரகால நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது என குறிப்பிட்டுள்ளார். (பின்குறிப்பு இதுவரை முப்படை தளபதி விபத்தில் உயிரிழந்தது குறித்து எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை)