Tamilnadu

விமானி இறுதியில் என்ன பேசினார் பிளாக் பாக்ஸ் மர்மத்திற்கு விடை என்ன?

black box
black box

இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது, இது குறித்து இந்திய விமானப்படை தனது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்த சூழலில் முப்படை தளபதி மரணத்தின் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது அது பின்வருமாறு :-


தமிழகத்தில் 2வது அதிர்ச்சி முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சோக சம்பவம் ஒன்று மீண்டும் பதிவாகியுள்ளது. தமிழக குன்னூர் பகுதிக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 14 பேரில், 13 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் தீ காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முப்படைகளின் கூட்டுத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் (63 வயது) மற்றும் மனைவி உயிரிழந்திருப்பது மற்றும் ராணுவ வீரர்கள் இறந்திருப்பது அதிர்ச்சியையும் பதற்றத்தையும் , பல சந்தேகங்களையும், குறிப்பாக சீன, பாகிஸ்தான் உளவு அமைப்பு சதியா? அல்லது தீவிரவாத பயங்கரவாத சதியா? என பலவித கோணங்களில் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. முப்படை கூட்டுத்தலைமை தளபதியான பிபின் ராவத் இந்த ஆட்சியில் தான் முப்படைக்கும் முதல் கூட்டு தலைமை தளபதி என 2019ல் அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இதற்கு முன், முப்படைக்கும் கூட்டாக ஒரே  தலைமை தளபதி என யாரும் இந்தப் பதவியை வகித்ததில்லை.

1978 இருந்து ராணுவத்தில் பணியில் இருக்கும் இவரின் சாதனை மிகப் பெரியது. கார்கில், சியாச்சின், லடாக் போன்ற மலைப் பகுதியில் நடந்த யுத்தத்தில் நிபுணத்துவம் பெற்றவர். பாலக்கோட் தாக்குதலில், இவர் செயலாற்றிய விதம், பலரின் பாராட்டுதலைப் பெற்றது. குறிப்பாக சீன ராணுவத்தின் ஊடுருவல்களளை எல்லையில் தடுத்து நிறுத்தியவர். ஜார்க்கண்ட் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர். சமீபத்தில் நடந்த இந்திய-சீன பிரச்சனையில், எல்லைக்கே சென்று ராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டியவர், மேலும், ஒரு அடி நிலத்தை எதிரிகள் அடைய மனதில் நினைத்தாலும், நம் ராணுவத்தால் விண்ணுலகுக்கு  அனுப்பப்படுவார்கள் என வீர முழக்கமிட்டவர்.

ஒன்றுக்கு இரண்டு இன்ஜின் உள்ள, அதுவும் முப்படைக்கும் கூட்டு தளபதி செல்லும் ராணுவ ஹெலிகாப்டர், பலவித சோதனைகளுக்கு உட்பட்டு பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது, பலவித சந்தேகங்களை கிளப்பியுள்ளது, இந்த அசாதாரண சூழலில், black box கிடைத்து, கடைசியாக ஹெலிகாப்டர் ஓட்டிய விமானி என்ன செய்தார், பேசினார் என்று தெரிந்தால்தான், முழுமையாக என்ன பிரச்சினை என்பதை அறிய முடியும் என அந்த வைரலாகும் தகவலில் குறிப்பிட பட்டுள்ளது.