சென்னையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என்ற சர்ச்சை உருவாகி உள்ளது. இதே போல ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பிறகு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பை மழையை காரணம் காட்டி வாபஸ் பெற்றனர்.
அப்போது இருந்தே திராவிட மாடல் அரசு நடத்துபவர்கள் பீப் என்றாலே பீபீ எகிறுகிறது. ஏற்கனவே ஒரு முறை சிக்கி மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டோம் என்பதை அறிந்த அமைச்சர் மா.சுப்ரமணியன் , இந்த முறை சென்னையில் நடைபெறும் உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு இடம் கொடுக்கவில்லை. இது குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது கூட ஆரம்பத்தில் இதனை சர்ச்சையாக பார்க்க வேண்டாம், எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.
பிளீஸ், நானும் பீப் சாப்பிடுபவன் தான். ஆனால் யாரும் இதற்காக வரவில்லை முன் வந்திருந்தால் நாங்கள் இடம் ஒதுக்கிருப்போம். உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என செய்தியாளர் சந்திப்பில் இருந்து ஜகா வாங்கியுள்ளார்.
இந்துக்கள் புனிதமாக கருதக்கூடிய மாட்டினை உணவாக உண்பதை பாவம் என்று கருதி தான் ஆம்பூரில் இந்த பிரச்சினை எழுந்த போது இந்து அமைப்புகள் வெகுண்டெழுந்தன. அது போல் சென்னையில் எதுவும் நடந்துவிடக்கூடாது. இப்போது தான் பிங்க் கலர் பஸ் பிரச்னை முடிந்துள்ளது. அவ்வப்போது ஊழல் புகார்களும் வருகிறது, இதற்கு நடுவில் இந்த பீப் கறிக்கு ஒரு புள்ளி வைத்து விட்டு கிளம்பிவிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.