அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்தவாரம் ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று(மே 17) வந்த நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு நிதியாக தன் சார்பில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.தமிழக முதல்வராக ஸ்டாலின் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் ஏற்கனவே டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருந்தார் ரஜினி.
இப்போது நேரிலும் வாழ்த்திவிட்டு, கொரோனா தடுப்பு நிதியையும் வழங்கினார், ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை கொண்டுவர வேண்டாம் எனவும் புதங்கங்கள் மட்டும் பரிசாக கொடுத்தால் போதும் என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து ஸ்டாலினை சந்திக்க வரும் அரசு அதிகாரிகள் தொடங்கி, பல்வேறு தலைவர்கள் பெரியார் புத்தகத்தில் தொடங்கி, திராவிட இயக்க வரலாறு என திராவிடம், நாத்திகம் குறித்த புத்தகங்களை பரிசளித்து வந்தனர் புதிதாக நியமிக்கப்பட்ட மாநகராட்சி ஆணையரும் பெரியார் புத்தகத்தை பரிசு அளித்தது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 'ஒரு யோகியின் சுயசரிதம்' என்ற ஆன்மீகத்தை வலியுறுத்தும் புத்தகத்தை கொடுத்துள்ளார், சிம்பிளாக ஆன்மீகத்தை படியுங்கள் ஸ்டாலின் என சொல்லாமல் குறிப்பால் உணர்த்திவிட்டார் ரஜினி என்கின்றன ஆன்மீக ஆதரவாளர்கள்.
முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய செய்தி குறிப்பிலும் ரஜினி காசோலை கொடுத்த காட்சியும், அதன் பின்னர், இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிய காட்சிகள் தான் இடம்பெற்றன, புத்தகம் கொடுத்த காட்சி வெட்டி ஒட்ட பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் பெரியார் ஆதரவாளர்கள் சிலர், நாத்திக கொள்கை கொண்ட முதல்வருக்கு ஒரு யோகியின் சுயசரிதை என்ற புத்தகத்தை கொடுக்கலாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அஜித் போட்டுவந்த மாஸ்க், விஜய் ஒட்டி வந்த சைக்கிளை வைத்து குறிப்பால் உணர்த்துவதாக பலர் பேசி வந்த நிலையில், தமிழகத்தை காட்டிலும் மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேச முதல்வர் யோகி கொரோனவை கட்டுப்படுத்தியது போன்று, தமிழக மக்களை கொரோனாவில் இருந்து மீட்டு வாருங்கள் என ஸ்டாலினுக்கு ரஜினி குறிப்பால் உணர்த்துவதாக பாஜகவினர் கலாய்த்து வருகின்றனர்.