இப்படி ஒரு நிலை அருண்ராஜா காமராஜுக்கு வர கூடாது.. கண்ணீர் மல்க அஞ்சலி!!இப்படி ஒரு நிலை அருண்ராஜா காமராஜுக்கு வர கூடாது.. கண்ணீர் மல்க அஞ்சலி!!
இப்படி ஒரு நிலை அருண்ராஜா காமராஜுக்கு வர கூடாது.. கண்ணீர் மல்க அஞ்சலி!!

கொரோனாவில் அருண்ராஜா மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை திரை துறையினர் இடையே உண்டாக்கியுள்ளது.

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது.

இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று இரவு அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மனைவியின் உடலுக்கு, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை பார்த்து அருகில் இருந்தவர்கள் மனமுடைந்து போயினர்.

இதேபோல் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலினும், சிவகார்த்திகேயனும் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பெரும் வசதி படைத்த திரைத்துறையினர் பிரபலங்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களே சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவரும் நிலையில் சாதாரண பொதுமக்கள் வீட்டில் இருப்பது ஒன்றே இதற்கு தீர்வு என கூறப்படுகிறது.

Share at :

Recent posts

View all posts

Reach out