எந்த நாடும் எடுக்காத முயற்சியை இந்தியா செய்து வருகிறது தங்கள் நாட்டு மக்களை மாணவர்களை காப்பாற்ற முழு வீச்சில் இந்தியா இறங்கியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் முக்கிய செய்தியாக ஒளிபரப்பி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மாணவர்களோ இந்திய கொடியை பிடித்து கொண்டு பாரத் மாதக்கி ஜெய் என கூறி எல்லையை கடந்தோம் என கூறியதாக வீடியோக்கள் வைரலாகின்றன. இந்த நிலையில் உலகம் வியந்த மத்திய பாஜக அரசின் முயற்சி குறித்து தமிழக ஊடகங்கள் பெரிதாக வெளியில் சொல்லவில்லை.
இந்த சூழலில் தனியார் ஊடகம் ஒன்றில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்களின் பெற்றோர் இருவரை அழைத்து பேட்டி கண்டனர் அப்போது பேட்டியில் பேசிய மாணவரின் பெற்றோர் தமிழக ஊடகங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மத்திய அரசை வெகுவாக பாராட்டி பேசினார்.
எனது மகன் சொன்னான் நமது நாடு நம்மை அருமையாக பார்த்து கொண்டது இப்படி ஒரு கவனிப்பை நான் பார்த்தது இல்லை சிம் கார்டு முதல் படுக்கை வரை பார்த்து கொண்டார்க்கலாம் வேறு எந்த நாடும் இப்படி ஒரு முயற்சியை எடுக்கவில்லையாம் என என் மகன் சொன்னான் எனவும் இதற்கு பாரத நாட்டிற்கு நன்றி எனவும் கூடவே சாம்பிராதயமாக தமிழக அரசிற்கும் நன்றி சொன்னார்.
இந்த நிலையில் வழக்கமாக மத்திய அரசை குறை கூறினால் முக்கிய செய்தியாக ஒளிபரப்பும் ஊடகம் என்னடா இது இப்படி தமிழ்நாட்டில் பாமர மக்கள் கூட மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறார்கள் என நினைத்தார்களோ தெரியவில்லை பெற்றோரின் பேட்டியை பாதியிலேயே நிறுத்தி நிகழ்ச்சியை முடித்து கொண்டனர்.
எனினும் ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல அமைந்தது. மாணவனின் பெற்றோர் கொடுத்த பேட்டியையும் செய்தியாளர் முகம் மாறிய விடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் .