கரூரில் பல நூறு கோடி ரூபாய் பணம் கணக்கில் வராததும், மேலும் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது போன்ற பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த ரெய்டு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அந்த ரெய்டு முடிவடைந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த எட்டு மாத காலமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்காணித்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 26 ஆம் தேதி அதிகாலையில் ரெய்டு இறங்கினர், முதலில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தான் ரெய்டு துவங்கப்பட்டது 40 இடங்கள் என குறிப்பிட்டு ஆரம்பித்த ரெய்டு பல திடுக்கிடும் உண்மைகள் மற்றும் ஆவணங்கள் கிடைத்ததால் போகப் போகப் போக இடங்கள் அதிகரித்து இருநூறாக உயர்ந்தது இந்த ரெய்டு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல தென் இந்திய மாநிலங்களிலும் செந்தில் பாலாஜிக்கு நெட்வொர்க் இருப்பதை வருமானவரி துறையினர் கண்டறிந்து அங்கும் அதிரடி சோதனைகள் இறங்கினர்.
இந்த சோதனையில் இறங்கியதற்கு பின்னர் வருமானவரித்துறையினர் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பண பரிமாற்றங்கள் மற்றும் சொத்து வாங்கிய விவரங்கள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எல்லாவற்றையும் அடுத்து தமிழக அரசு மற்றும் காவல்துறையிடம் இருந்து சரியான அளவில் ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து சிஐஎஸ்எப் வீரர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ரெய்டுகளில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதால் அதனை வைத்து வருமானவரித்துறையினர் அடுத்தடுத்ததாக தங்கள் பணிகளை திட்டமிட துவங்கியதும் மேலும் வருமானவரித்துறையினர் இந்த ரெய்டு இத்துடன் நிக்கப்போவதில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்கும் பொழுது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கரூர் தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரி எதிரே உள்ள சுரேந்தர் மெஸ், அதன் மாடியில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றதாகவும், கரூர் மட்டுமின்றி கோவையிலும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றதாகவும் இந்த சோதனையின் போது ஒரு சில இடங்களுக்கு வருமானவரி துறையினர் சீல் வைத்ததுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு அலுவலகங்களில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை முடிவுக்கு வந்துள்ள சமயத்தில் கடந்த எட்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகள் கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 350 கோடி ரூபாய் வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் ஆவணங்களாக சேகரித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இவற்றையெல்லாம் தொகுத்து விரைவில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் அந்த சம்மனுக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி சம்மனுக்கு நேரில் ஆஜராகும் பொழுது வருமானத்தை மறைத்த குற்றம் மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றம் ஆகியவற்றையெல்லாம் வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவ்வாறு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் திமுக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிவிடலாமா என ஒரு பேச்சு அடிபட்டு வருவதாகவும் குறிப்பாக திமுகவின் மூத்த தலைவர்கள் செந்தில் பாலாஜி இருந்தால் நம்மால் வரும் தேர்தலில் ஓட்டு கேட்டு மக்களிடம் செல்ல முடியாது அவரை நீக்கிவிட்டு கறையை துடைத்தாகி விட்டது என்பது போன்ற பிரச்சாரங்களை செய்வது நமக்கு வாக்குகளை சேகரிக்க உதவும் எனவே செந்தில் பாலாஜி நீக்குவதை சிறந்தது என முதல்வரிடம் கூறி வருவதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.