“நான் ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்... நல்லவங்க கூட்டுக்காரன்னு...” எப்ப நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடுனதுல இருந்தே ஆட்டோக்காரங்க மேல இருந்த சாமானிய மக்களோட கண்ணோட்டம் டோட்டலா மாறிடுச்சி. அதுமட்டும் இல்லாம ஆட்டோக்காரங்களும் வெறும் பிரசவத்துக்கு இலவசம் அப்படிங்கிறதையும் கடந்து நிறைய நல்ல, நல்ல விஷயங்களை செஞ்சிக்கிட்டு வர்றாங்க.
இப்ப அப்படிப்பட்ட ஒரு சூப்பரான ஆட்டோக்காரரைத் தா நம்ப சூப்பர் ஸ்டார் ஃபேனான அண்ணாமலை அடையாளம் காட்டியிருக்காரு. பாஜக தலைவரான அண்ணாமலை தீவிர ரஜினி ரசிகர் அப்படிங்கிறது பலருக்கும் தெரியும். அவர மாதிரியே அண்ணாமலையும், தமிழ்நாட்டோ மூலை முடுக்குல அடையாளம் காணப்படாம இருக்குற திறமைசாலிகள், நாட்டுக்கு நல்லது செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்கள், வறுமையை கடந்தும் சாதிச்சிக்கிட்டு இருக்குற விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள எல்லாரையும் நேருல சந்திச்சி மனசு விட்டு பாராட்டிக்கிட்டு வர்றாரு.
அப்படி அண்ணாமலை அவர்கள் தன்னோட ட்விட்டர் பக்கத்துல வெளியிட்டிருக்குற வீடியோ ஒண்ணு சோசியல் மீடியாவில செம்ம வைரலா ஷேர் ஆகிட்டு இருக்கு. சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குபேரன்-ங்கிறவர் தன்னோட ஆட்டோவையே ஒரு மினி நூலகமா மாத்தியிருக்காரு. நம்ப எல்லாருமே இப்போ செல்போனில தான் மூழ்கிக்கிடக்குறோம். என் ஆட்டோவுல போற கொஞ்ச நேரமாவது மக்கள் புத்தகங்கள படிக்கட்டு அப்படிங்கிற நல்ல எண்ணத்தோட இந்த விஷயத்த செஞ்சியிருக்காரு.
அதுமட்டும் இல்லாம மரம் வளர்ப்போட முக்கியத்துவத்த மக்களுக்கு புரிய வைக்கிற மாதிரி ஆட்டோவிலேயே சில செடிகளையும் வளர்த்துக்கிட்டு வர்றாரு. அத்துடன் உடல் உறுப்பு தானாத்தோட முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு இருக்காரு.
அவரோட ஆட்டோவுக்கு நேரடி விசிட் அடிச்ச பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குபரேனை மனதார பாராட்டி இருக்காரு. அத்தோட குபேரன் தன்னோட ஆட்டோவுல வச்சியிருக்குற மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவி உண்டியல்லையும் அண்ணாமலை பணம் போட்டு, தன்னால ஆன ஊக்கத்த அவருக்கு கொடுத்திருக்காரு. கடைசியா கிளம்புறதுக்கு முன்னாடி சில புத்தகங்களையும் அவருக்கு பரிசா கொடுத்து, இந்த மாதிரியான சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நீங்க மேலும் தொடரனுன்னு வாழ்த்தி இருக்காரு.
அண்ணாமலை அவர்கள் ஏற்கனவே அறியப்படாத அதிசய மனிதர் அப்படிங்கிற தலைப்புல தன்னோட ட்விட்டர் பக்கத்துல நிறைய நல்ல மனிதர்கள் பத்தின தகவல்கள உலகறிய செஞ்சிட்டு இருக்காரு. இருந்தாலும் ஆட்டோ டிரைவர் குபேரனை நேருல சந்திச்சி அவருக்கு ஊக்கம் கொடுத்திருக்குற இந்த வீடியோ நெட்டிசன்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.