Tamilnadu

தலைமை செயலாளருக்கு ஆளுநர் போட்ட உத்தரவு , முடிந்தது சோலி யாரும் எதிர்பார்க்காத சம்பவம்

tn governor ravi
tn governor ravi

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார் ஸ்டாலின் அவரது அரசின் முதல் சட்ட பேரவை கூட்ட தொடர் அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் தலைமையில் தொடங்கியது, மேலும்அப்போது தமிழக அரசின் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், அரசின் கொள்கை முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.




இதில் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார் ஆளுநர் அதில் அனைத்து நுகர்வோருக்கும் தரமான, நம்பகத்தன்மை வாய்ந்த மின்சாரத்தை வழங்குவது,தமிழ்நாட்டில், 2,73,241 கோடி ரூபாய் முதலீட்டுடன், 1.52 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய, 23.60 இலட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, ‘புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொள்கை’ இறுதி செய்யப்பட்டு, விரைவில் வழங்குவது,

நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்குத் தரமான வீட்டு வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசின் பிரதிநிதியாக அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் வாசித்தார், அந்த உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை தமிழகம் தலை நிமிர்ந்தது என பேசி வாங்கி காட்டினார் கொங்கு ஈஸ்வரன்.

இந்த சூழலில்தான் புதிய ஆளுநர் ரவி தலைமை செயலாளர் இறை அன்புவை அழைத்து, தமிழக அரசு செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒதுக்கப்படும் நிதி, மத்திய அரசு நிதி எவ்வாறு பயன்படுகிறது என அனைத்தையும் அறிக்கையாக மட்டும் அல்லாமல் பவர் பாய்ண்ட் மூலம் கொடுக்க வேண்டும் என உத்தரவு போட்டு இருக்கிறார், இது குறித்து அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுக்கும் தயாராக பணிகள் குறித்த விவரங்களை வைத்து கொள்ளுமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஆளும் கட்சி அதன் கூட்டணி கட்சியினர் இடையே உண்டாக்கிய நிலையில் என்ன நடந்தது என TNNEWS24 தரப்பில் விசாரித்தோம் இதில் பல தகவல்கள் ஆளும் கட்சி வட்டாரத்தை புரட்டி போட்டுள்ளது,  தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த மத்திய திட்டப் பணி ஆய்வு செய்ய மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு என்ற ஒன்றை அமைத்தார்.

அந்த குழுவில் மத்திய அரசு பரிந்துரைத்த பிரதிநிதிகள் மாநில அரசு பரிந்துரைத்த உறுப்பினர்கள் இடம்பெற்றதில் மத்திய அரசிற்கு திருப்தி இல்லை எனவும், பல மத்திய அரசு திட்டத்தை மாநில அரசான திமுக திட்டமிட்ட மறைப்பதாகவும், மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தும் அனைவருக்கும் வீடு திட்டம், கொரோனா காலத்தில் இலவச ரேஷன் உள்ளிட்ட அனைத்திலும் மாநில அரசுதான் கொடுப்பது போல தோற்றத்தை உண்டாக்குகிறார்கள்.

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு தான் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொடுக்கிறது, ஆனால் தமிழகத்தில் பிரதமரின் புகைப்படம் கூட இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறது என மாநில அரசு மீது குற்றசாட்டு எழுந்துள்ளது இது தவிர்த்து தற்போது பிரதமர் நிதியின் மூலம் அமைக்கப்பட்ட இலவச ஆக்சிஷன் ஆலையிலும் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது,

 இவை அனைத்தையும் மாநிலத்தில் உள்ள பாஜகவினர், சில முன்னாள் மத்திய அரசு அதிகாரிகள் ஆளுநர் மற்றும் பிரதம அலுவலக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர், இதையடுத்தே அனைத்து தகவல்களையும் ஆளுநர் துறை வாரியாக கேட்டுள்ளதாகவும், இதில் மாநில அரசு ஒதுக்கிய டெண்டர்கள் உட்பட பல விவரங்கள் வெளியாகலாம் என பிரத்தியேக தகவல் TNNEWS24 க்கு கிடைத்துள்ளது.

இனி யாரும் எதிர்பாராத தரமான சம்பவங்கள் அரங்கேறலாம் எனவும் குறிப்பாக ஆளுநர் நேரடியாக ஆய்விற்கு செல்வதும் செல்லாததும் மாநில அரசு நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது என்கின்றன ராஜ்பவன் வட்டாரங்கள். ஆளுநர் அதிரடி இனிதான் ஆரம்பம்.