நீ டெல்லியில் இருக்கிற உன் குடும்பம் இங்கதான் இருக்கு நீ இங்க வந்து தானே ஆகணும் வா பாக்கலாம் என விசிக கட்சியை சேர்ந்தவர்கள் இராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்த நிலையில் அவர் தற்போது தனது சொந்த ஊருக்கு வந்து இருக்கும் தகவல் பரவி வருகிறது.
தமிழகத்தில் சமூக ஊடகங்களில் கடந்த சில வாரங்களாக மிக பெரிய பேசுப்பொருளாக மாறிய சம்பவம், துணை இராணுவ வீரருக்கு விசிகவை சேர்ந்த சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தது, இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பாஜகவினர் நேரடியாக இராணுவ வீரர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர் மேலும் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் எனவும் உறுதி அளித்தனர், பிரச்சனையின் வீரியத்தை அறிந்த விசிக தலைவர் திருமாவளவன் இராணுவ வீரரை மிரட்டிய மணி கண்டனை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் இராணுவ வீரர் குருமூர்த்தி விருதுநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்து இருப்பதுடன் கெத்தாக காலரை தூக்கிவிட்டு வலம் வந்த வண்ணம் இருக்கிறார், நண்பர்கள் வீட்டிற்கு செல்வது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, தனது உறவினர் நடத்தும் ஆதரவற்ற விடுதிக்கு சென்று உதவுவது என சொந்த ஊரில் கால் பதித்து இருக்கிறார் குருமூர்த்தி.
அதே நேரத்தில் ஊருக்கு வர முடியுமா? உன் குடும்பம் இங்கதானே இருக்கு என மிரட்டல் விடுத்த விசிகவினர் விஷயம் தேசிய அளவில் சென்ற காணத்தால் வாய் மூடி அமைதியாகி விட்டனர். சவால் விடுத்த நிலையில் சொந்த ஊருக்கு வந்து விட்டார் குரு மூர்த்தி அதே நேரத்தில் எங்கே இருக்கிறார்கள் என தெரியாத அளவிற்கு அமைதியாகி இருக்கிறார்கள் மணிமாறான் உள்ளிட்ட பலர்.
இராணுவ வீரர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் பலரும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர், சமீபத்தில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் உள்ளிட்டவர்கள் நேரடியாக விருதுநகர் சென்று குரு மூர்த்திக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடதக்கது.