24 special

தேசிய கீதம் இசைக்கும் போது நேராக நில்லுங்க உதயநிதி் …. முதல் நாளே கிளம்பியது விமர்சனம்….!

Udhayanidhi stalin
Udhayanidhi stalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பொறுப்பு ஏற்று இருக்கிறார் உதயநிதி, முதல்வருக்கு இணையான பதவி ஏற்பு விழா கோலாகலமாக உதயநிதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, மாநில அமைச்சர்கள் முழுவதும் கூடி இருந்தார்கள். அரசு இயந்திரம் முழுவதும் கிண்டி ஆளுநர் மாளிகையில் குவிக்கப்பட்டு இருந்தது.


இது ஒருபுறம் என்றால் அமைச்சராக பொறுப்பு ஏற்ற உதயநிதிக்கு நேற்று முழுமையான ஆலோசனை கொடுக்கப்பட்டு இருக்கிறது, உறுதி மொழி ஏற்பது, மேடையில் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுப்பது என பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கிறது அதிலும் தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் உள்ளிட்டவை இசைக்கும் போது எவ்வாறு நிற்பது என பல வகையில் ஆலோசனை கொடுக்கப்பட்டு இருந்ததாம்.

அதில் பலவற்றை சிறப்பாக செய்த உதயநிதி குறிப்பாக தேசிய கீதம் இசைக்கும் போது கைகளை நேராக நீட்டி நிற்காமல் கைகளை கட்டி நின்றதும், தேசிய கீதம் இசைக்கும் போது, முகத்தில் கைகளை வைத்து கொண்டு இருந்ததும் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை பெற்றுள்ளது.

அமைச்சராக பொறுப்பு ஏற்ற ஒருவர் முதலில் நாட்டு பற்றிற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அடுத்த முறை இதே போன்று தேசிய கீதம் இசைக்கும் போது கைகளை கட்டி கொண்டோ, முகத்தில் கைகளை வைத்து கொண்டோ இருந்தால் உதயநிதிக்கு எதிர்ப்புகள் கிளம்பும் என்பது நிச்சயம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இது மட்டும் இன்றி மற்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது, ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.மேலும், உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

அவர் பொறுப்பு ஏற்ற பிறகு ஆளுநர் உடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகைப்படம் எடுப்பது வழக்கம் இதில் சீனியர் அமைச்சர்களான மா.சுப்பிரமணியம், PTR, சேகர்பாபு உள்ளிட்டோர் பின்வரிசையில் நிற்க, முன் வரிசையில் உதயநிதிக்கு நாற்காழி போட்டு உட்கார வைத்த பஞ்சாயத்தும் உதயநிதி அமைச்சராக பொறுப்பு ஏற்ற முதல் நாளே தொடங்கி இருக்கிறது.