தமிழகத்தில் நாளுக்கு நாள் பத்திரிகையாளர் என்ற பெயரில் யூடுப் சேனல் ஒன்றை தொடங்கிய பலர் தங்கள் ஆள் மனதில் இருக்கும் வக்கிரத்தை வெளிப்படையாக ஏதோ ஒரு கட்டத்தில் வெளிப்படுத்தி விடுகின்றனர் அந்த வகையில் இந்த முறை இணையதள வாசிக்களிடம் சிக்கி சிதைந்து இருப்பது ஜீவா என்ற ஜீவ சகாப்தம்.
பெரியாரிய இயக்கத்தை சேர்ந்த ஓவியா என்பவரின் மகன்தான் இந்த ஜீவ சகாப்தம் தனியார் ஊடகம் ஒன்றில் பணியாற்றிய ஜீவா, அவர் மீது மாரிதாஸ் வைத்த குற்றசாட்டு அடிப்படையில் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சூழலில் தனியார் யூடுப் சேனல் ஒன்றில் பணியில் இருந்த ஜீவா அங்கிருந்தும் வெளியேறி புதிய யூடுப் சேனல் ஒன்றை தொடங்கினார்.
அதில் அவர் நடிகர் மாதவன் இந்திய பிரதமர் மோடியின் டிஜிட்டல் பண பரிமாற்றம் குறித்து பாராட்டி பேசிய நிகழ்வை அடுத்து வெகுவாக மாதவனை விமர்சனம் செய்துள்ளார், மாதவன் சாதி வெறியராம் வெளிப்படையாக பூணூல் போட்டு கொண்டு இருக்கிறாராம், மகனுக்கும் பூணூல் போட சொல்லி கொடுத்து இருக்கிறாராம் இதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ஜீவ சகாப்தம்.
இந்த சூழலில் பலரும் ஜீவ சகாப்தத்தின் பேச்சை வலுவாக கண்டித்து வருகின்றனர், இஸ்லாமியர்கள் தலையில் குல்லா அணிவது மத வெறியா? கிறிஸ்தவர்கள் கழுத்தில் சிலுவை அணிவது மத வெறியா? பிறகு ஏன் மாதவனை மட்டும் குறிவைத்து பேச காரணம் என்ன என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சூழலில் பிரபல ட்ரோல் பக்கமான Tp மீம்ஸ் ஜீவாவின் பேச்சை அண்ணாமலையின் அட்டாக் லேயர் கருத்துடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்துள்ளது, இது ஒருபுறம் என்றால் அந்த வீடியோவில் வடிவேலுவை நோக்கி ஒருவர் துப்பும் காட்சி அப்படியே ஜீவாவை பார்ப்பது போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.