Tamilnadu

உறுதியானது இராமாயண கதை படம்! ராவணன் இவரா?? முதல் பாகத்துக்கே இவ்வளவு பட்ஜெட்டா....

Ramayana
Ramayana

முன்பெல்லாம் சினிமா துறையை எடுக்கும் பொழுது வெளியாகும் படங்கள் மற்றும் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலானவை இயற்கையாகவும் கிராமத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வறுமையை குறித்த கதையாகவும் நகைச்சுவையாகவும் பல கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது  அதேபோன்று தற்போது எடுக்கப்படும் படங்களின் அளவை பார்க்கும் பொழுது பட்ஜெட்டானது அதிக அளவிலும் எங்கு எடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை ஏனென்றால் ஒரு நடிகரை பார்ப்பதற்கு ரசிகர் கூட்டம் குவிந்து விடுகிறது என்பதற்காகவே அந்த படம் எடுக்கப் போகின்ற மொத்த ஊரையும் செட்டு போட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவின் தற்போது முக்கிய நடிகர்களாகவும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்கள் ஆகவும் உள்ள சூப்பர் ஸ்டார், விஜய், அஜித் மற்றும் இன்னும் சில நடிகர்களின் படப்பிடிப்புகள் கூட செட் போட்டு எடுக்கப்படுகிறது.


அப்படி தானாக உருவாக்கப்படும் ஒரு காட்சி மற்றும் ஊரை உருவாக்குவதற்கு நிச்சயமாக பல கோடி செலவாகிறது அந்த வகையிலே பல கோடி மதிப்பு செலவிடப்படும் படங்கள் மட்டுமே நல்ல வெற்றியை பெற்று தரும் என்ற ஒரு பிம்பமும் இருந்து வந்தது. ஆனால் அந்த பிம்பத்தை சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான மூன்று திரைப்படங்கள் முறியடித்து வசூலில் பட்டையை கிளப்பியது. அதேபோன்று அன்றிருக்கும் படங்களை விட இன்று அதிக தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய வருகிறது அதற்காக மக்கள் செலவிடும் செலவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, ஒருவேளை மக்கள் புதிய கதையை தேடி சென்று கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆமாம் தான்... அதே சமயத்தில் இதிகாசங்கள் மற்றும் புராணங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளையும் மக்கள் ஒருபோதும் புறக்கணித்ததே இல்லை!

உதாரணமாக பிரபல தொலைக்காட்சிகளில் மகாபாரதம் மற்றும் ராமாயணம் முருகனின் புராண கதைகள் கிருஷ்ணரின் கதைகள் சில இதிகாசங்கள் நாடகங்களாக முன்பு வெளியிடப்பட்டிருந்தது அதே கதை தற்போது மீண்டும் ஒளிபரப்பப்படும் பொழுதும் மக்கள் அதனை வரவேற்கிறார்கள் அந்த கதையை புது முகங்களோடு மீண்டும் எடுத்து வெளியிடும்பொழுதும் அதனையும் மக்கள் வரவேற்கிறார்கள். அதுமட்டுமின்றி இதே இதிகாசங்கள் மற்றும் புராணக் கதைகளை படமாக்கும் பொழுதும் மக்கள் பெருவாரியாக திரையரங்குகளில் வந்து மகிழ்ந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள் அப்படி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டாகும்!  ஏனென்றால் ஒரு சோழ மன்னனின் ஆட்சி குறித்து கதையாக ஒரு பிரபல ஆசிரியரின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் கதையானது இரண்டு பாகங்களாக வெளியானது. அதுவும் நல்ல வசூலை பெற்றது இதேபோன்று மகாபாரதம் என்று எடுத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்றுமே இருந்து வந்துள்ளது.

அதன்படி மீண்டும் தற்போது ராமாயண கதை படமாக்கப்பட உள்ளது அதுவும் ஹிந்தியில் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் ராமராகவும் சீத்தையாக சாய் பல்லவியும் ராவணனாக கேஜிஎப் படத்தின் நடிகரான யஷ்ஷும் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்ற கதையில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த படத்தை தங்கல் என்ற படத்தை எடுத்து ஹிந்தி மட்டும் இன்றி தமிழ் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிதேஷ் திவாரி எடுக்க உள்ளதாகவும் மிகப்பெரிய ஃபேன் இந்தியா படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமின்றி மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தில் முதல் பாகம் மட்டுமே 835 கோடி செலவில் எடுக்கப்பட உள்ளதாகவும் கிராபிக்ஸ் இல்லாமல் அசல் காட்சிகளாக இப்படத்தில் வரும் காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே அச்சு அசலான ஒரு ராமாயணத்தை திரையில் மக்கள் அனைவரும் கண்டு களிக்கலாம் என்பது பல சினிமா பிரியர்கள் மற்றும் ராமாயண இதிகாச பிரியர்களின் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்புகள் ஏற்படுத்தி உள்ளது.