Tamilnadu

விஷயம் ரொம்ப பெருசாமே பட்டியல் போட்டதால் அடக்கி வாசிக்க உத்தரவாம்! "ஓ அதுதான் அமைதியா"!

DGP and RN Ravi
DGP and RN Ravi

மதுரையை சேர்ந்தவர் எழுத்தாளர் மாரிதாஸ். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பலியான சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார் என்று கூறி மாரிதாசை கடந்த 9-ந் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.இந்தநிலையில் முப்படை தளபதி இறந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்த கருத்து சம்பந்தமாக போலீசார் பதிவு செய்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு விமர்சனம் செய்து ரத்து செய்தது.

இது ஒரு புறம் என்றால்  நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசில் ஒரு புகார் அளித்து இருந்தார். அதில், இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் மாரிதாஸ் பேசி பதிவிட்டிருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டு இருந்தார். இதன்பேரில் மேலப்பாளையம் போலீசார் கடந்த 4-4-2020 அன்று மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று முன்தினம் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசார், மாரிதாசை கைது செய்தனர்.

அவரை  நெல்லை 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி விஜயலட்சுமி முன் ஆஜர்படுத்தினார்கள்.நீதிபதி, அவரை 30-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் மீண்டும் அவரை தேனி சிறைக்கு அழைத்துச்சென்றனர்.இப்படி மாற்றி மாற்றி மாரிதாஸை கைது செய்த 10 நாட்களில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் அழைத்து சென்று அவரை பழிவாங்கும் நடவடிக்கையில் ஆளும் தரப்பு ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு வலுத்து வந்தது.

இந்த சூழலில் மதுரை சென்ற ஆளுநர் தமிழகத்தின் மூத்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டு வெளுத்து எடுத்துவிட்டாராம், சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் பொதுவானது என்றால் ஏன் எதிர்தரப்பு அளிக்கும் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, ஆதாரம் இருக்கிறது வழக்கு இருப்பவர்களை 15 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த தகவல் ஆளும் தரப்பிற்கு செல்ல கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அறுவருக்கதக்க வகையில் ஒருமையில் மத்திய அரசை விமர்சனம் செய்துவந்தவர்கள் உட்பட பலர் அமைதியாகி இருக்கின்றனர் மேலும் ஆளும் கட்சியின் இரண்டாம் தர பேச்சாளர்கள் பலரையும் வாயை அடக்கி வாசிக்க கோரி உத்தரவு போயிருக்கிறது.

இந்த சூழலில்தான் மாநிலம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த சட்டம் ஒழுங்கு டிஜிபி என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.. பிரதமர் தமிழகம் வரும் நாட்களுக்குள் மிக பெரும் பிரலயம் ஒன்று வெடிக்கலாம் என்று கூறப்படும் சூழலில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்க தொடங்கிவிட்டதாம் தமிழக காவல்துறை.