24 special

திமுக எம்.எல்.ஏ கேள்வியால் ஆடிப்போன முதல்வர்

Ashok kumar,mk stalin
Ashok kumar,mk stalin

சமீபத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் முன்னிலையிலேயே திமுக எம்.எல்.ஏ. ஒருவர் புலம்பி தீர்த்த சம்பவம் தான் கடந்த ஒருவாரமா பேசப்படும் டாபிக்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்களுக்கான கூட்டம்  பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி. எஸ்.எஸ். பழநி மாணிக்கம், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை, பேராவூரணி எம்.எல்.ஏ. அசோக்குமார் ஆகியோருடன் கட்சியோட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்துல நாங்க சொல்லுற ஆளுங்களுக்கு அரசு வேலை தர்ற மாட்டேங்கிறாங்க... அமைச்சர்களும், அதிகாரிகளும் எங்கள கண்டுக்கவே மாட்டேங்கிறீங்கன்னு திமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் புலம்பி தீர்த்திருக்குறது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கு. 

கட்சி நிர்வாகிகள் கூட்டத்துல பேசுன பேராவூரணி எம்.எல்.ஏ. அசோக்குமார், கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்ல, நாங்க சொல்லுற மாதிரி அதிகாரிங்க நடந்துக்க மாட்டேங்குறாங்க, குறிப்பா இப்ப மாறுதலாகி போன தஞ்சாவூர் கலெக்டர் எந்த லெட்டர் கொடுத்தாலும் ஏத்துக்காம... எல்லாத்தையும் கிடப்புல போட்டு போய்ட்டாருன்னு  பேசியிருக்காரு. அடடா ஏதோ முக்கியமான மக்கள் பிரச்சனைக்காக தான் எம்.எல்.ஏ. இப்படி ஆவேசமா அமைச்சர் கிட்ட முறையிட்டிருக்காருன்னு பார்த்தா, அது தான் இல்லியாம். 

எம்.எல்.ஏ.ன்னாலே வேண்டப்பட்டவங்க, விசுவாகிகன்னு சிலர் இருப்பாங்க இல்லையா???... அப்படி சிலருக்கு  இந்த எம்.எல்.ஏவும் கிராம உதவியாளர், அங்கன்வாடி பணியாளர் அப்படின்னு அவங்க தகுதி அடிப்படையில வேலை போட்டு கொடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்திருக்காரு. அதை தான் அதிகாரிகள் ஏத்துக்கலைன்னும், எங்கள உதாசீனப்படுத்திட்டாங்கன்னும் புகார் சொல்லியிருக்குறதா கூறப்படுது. 

இத்தோட இந்த பஞ்சாயத்து நிற்கவில்லையாம், நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறதுக்காக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள எம்.எல்.ஏ.க்களான எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம,,,,,  பயணத்திட்டம் முதற்கொண்டு எல்லாத்தையும் அதிகாரிகளே முடிவு பண்ணிடுறாங்க.  அமைச்சரான நீங்களும் எங்க கிட்ட அதைப் பத்தி கேட்குறதே இல்ல. உங்கள வரவேற்குறதுக்காக கலர், கலரா பேனர் வச்சி, கொடி கட்டி லட்சக்கணக்குல செலவு பண்றது எல்லாம் கட்சிக்காரங்க தான், ஆனா அமைச்சருங்க நீங்க என்னடான்னா... வந்தவுடனே நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு ரிப்பன வெட்டிட்டு போய்டுறீங்க. கட்சிக்காராங்ககிட்ட முகம் கொடுத்து பேசமாட்டேங்கிறீங்க, சால்வை, மாலை போர்த்த வந்தா வாங்க மாட்டேங்கிறீங்க. இப்படியே போய்ட்டு இருந்தா வர்ற மக்களவை தேர்தல்ல எப்படி ஓட்டு வருன்னு? விவாதம் நடந்ததா தகவல்கள் வெளியாகியிருக்கு. 

அப்போ அசோக்குமார பேசவிடாம எம்.பி. பழநிமாணிக்கம் தடுத்திருக்காரு. இதனால கடுப்பான அசோக்குமார் ஆதரவாளர்கள் பழநிமாணிக்கத்தைப் பார்த்து நீங்க தான் தொகுதி பாக்கமே வர்றது கிடையாதேன்னு சொல்ல... இரண்டு தரப்புக்கும் இடையில பெரிய வாக்குவாதமே வெடிச்சதா கூட்டத்துல பங்கேத்தவங்க சொல்லுறாங்க. 

அதாவது, ஆளுங்கட்சி எதை செய்தாலும் அதில் உள்ள குறைகளை பெரும் குற்றசாட்டாக  வைக்கிறது எதிர்க்கட்சிகளான பாஜக அதிமுக மற்றும் இன்னும் சில காட்சிகள். எதிர் காட்சிகள் வைக்கக்கூடிய குற்றசாட்டுகளை சமாளிக்கவே நேரம் சரியா இருக்கும் போது, பத்தாததுக்கு உட்கட்சிலேயே எம்எல்ஏ  எம் பிக்கள் ... கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலேயே..இப்படி புலம்பி தள்ளி இருப்பது உட்கட்சி பூசலை ஏற்படுத்தி இருக்குன்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க.