Tamilnadu

எதை வைத்து முடிக்க நினைத்தார்களோ அதை வைத்தே எதிர் தரப்பை முடித்த மோடி பிரபல எழுத்தாளர் சொன்ன செய்தி!

Modi
Modi

பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் பஞ்சாப் அரசியல் நிலவரம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- காங்கிராஸ் தூண்டிவிட்ட பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை வைத்தே பஞ்சாபிய காங்கிரஸினை உடைத்து போட்ட பாஜக அடுத்து அங்கு ஆட்சி அமைக்க அடிகோலுகின்றது


ஆம், பஞ்சாபில் காங்கிரஸும் சிரோன்மணி அகாலிதளமுமே ஆதிக்கம் செலுத்தும். அந்த பஞ்சாபில் மோடிக்கு செக் வைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தூண்டிவிட்டது ஒன்றும் ரகசியமல்ல‌, ஆனால் பாஜகவின் வியூகம் மிக நிதானமாக இருந்தது, தேர்ந்த அரசியல் கட்சி என காட்டிவிட்டார்கள் அழகான ராஜதந்திர அசைவுகளை செய்தார்கள்.

காங்கிரஸில் இருந்த தேசாபிமானியும் மாநில முதல்வருமான அம்ரீந்தர் சிங்குக்கும் கட்சிக்கும் இருந்த முட்டல் மோதல்களில் புகுந்த பாஜக வெளிதெரியாமல் காங்கிரஸை அங்கே உடைத்து போட்டது, இப்பொழுது பஞ்சாப் லோக் காங்கிரஸ் என தனி கட்சி நடத்துகின்றார் அம்ரீந்தர் சிங், அவருக்கு செல்வாக்கும் கணிசமாக இருக்கின்றது

விவசாய சட்டங்களை யாரும் எதிர்பாரா நிலையில் வாபஸ் வாங்கி, இது அம்ரீந்தரின் முயற்சியால்  கிடைத்த வெற்றி என செய்திகளை கசியவிட்டு பஞ்சாபில் அவருக்கு மேலும் செல்வாக்கை கூட்டுகின்றது அரசு அதே நேரம் பாஜக சீக்கிய எதிரி அல்ல என்பதையும் அது சொல்ல தயங்கவில்லை,

மத்திய அரசுக்கு பஞ்சாபியர் மேல் ஒரு நம்பிக்கை வந்திருக்கும் நிலையில் அம்ரீந்தர் சிங் "பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம்" என பகிரங்கமாக அறிவித்துவிட்டார்,இனி பஞ்சாபிலும் பாஜக காலூன்றும்.

ஆக பஞ்சாபில் நுழைய வாய்ப்பு பார்த்து கொண்டிருந்த பாஜகவுக்கு பெரும் வாய்ப்பு கொடுத்துவிட்டது காங்கிரஸ் தாக்க வரும் எதிரியின் ஆயுதத்தை பிடுங்கி அவனை பிளந்து கட்டுவது போல தனக்கு எதிராக காங்கிரஸ் ஏவிய விவசாயிகள் போராட்டத்தை வைத்தே பஞ்சாபிய காங்கிரஸை அழகாக உடைத்து போட்டிருக்கின்றது பாஜக என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

மிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.