ஒருவர் நமது சொந்த மாநில நலன் குறித்து பேச வருகிறார் என்பது கூட அறியாமல் குறுக்கே மறித்து கூச்சல் போட்ட திமுகவினர் சபாநாயகர் எச்சரிக்கையை தொடர்ந்து அமைதியானதும் GK வாசன் பேசிய கருத்திற்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் மாநிலங்களவையில் அரங்கேறியுள்ளது.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நேரம் இல்லா நேரத்தில் (ஜிரோ ஹவா்) அவசர முக்கியத்துவமான விவாதங்களை எழுப்ப மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு அனுமதித்தாா். அப்போது தமிழகத்தில் பெய்து வரும் மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து பேசுவதற்கு தமாகா கட்சித் தலைவரான ஜி.கே.வாசன் அனுமதி கேட்டாா். இதற்கு து அவைத் தலைவா் அனுமதியளித்தாா். அப்போது, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ், திமுக உறுப்பினா்கள்,கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனா். இருப்பினும், அவைத் தலைவா் இந்த இடையூறுகளுக்கு இடையே ஜி.கே. வாசனை பேச அனுமதித்தாா்.
இதைத் தொடா்ந்து வாசன் பேச எழுந்தாா். ஆனால் காங்கிரஸ் எம்பிகள் ஜி.கே. வாசனை அமரும்படி கோரினாா்கள். குறிப்பாக ஜெயராம் ரமேஷ், திருச்சி சிவா போன்றவா்கள் வாசனை உட்காரும்படி கோரினா். இருப்பினும், பெரும் அமளிகளுக்கிடையே, தமிழக மழை, வெள்ளச் சேதம் குறித்து ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தின் அவசர முக்கியத்துவமான விவகாரம் இது. இடையூறு செய்யாமல் கேளுங்கள். கடந்த ஒரு மாத மழையின் காரணமாக தமிழ்நாடு தத்தளித்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றிலும் கடந்த நூறு ஆண்டுகள் இது போன்ற மழை பெய்தது கிடையாது.
வட தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இங்குள்ள ஏராளமான அணைகள், ஏரிகள், நீா்தேக்கங்கள், குளங்கள் நிரம்பி வளிகின்றன.
அரசுக்கு மிகப் பெரிய சவால்: சென்னை நகரின் தெருக்களில் மழை நீா் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது. தொடா் மழையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களும் இதில் தப்பவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள் எல்லாம் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் தமிழக அரசுக்கு உதவி தேவை. அவா்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவால்.‘கை’ கொடுக்க வேண்டும்: இதனால், மத்திய அரசு தமிழகத்திற்கு கை கொடுக்க வேண்டும். மத்திய அரசின் குழுவை மீண்டும் தமிழகத்திற்கு உடனடியாக அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் இக்கட்டான நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ள தமிழகத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்திற்கு நிதியுதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் ஜி.கே. வாசன்.
கோரிக்கைக்கு திமுக ஆதரவு: வாசன் பேசும் வரை, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆதரவாக திமுக எம்பிக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனா். பின்னா், ஜி.கே. வாசனின் கோரிக்கையை ஆமோதிக்கின்றேன் என்றாா் மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன்.
இதைத் தொடா்ந்து, திருச்சி சிவா, மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றாா். மற்ற திமுக உறுப்பினா்களான டிகேஎஸ் இளங்கோவன், சண்முகம், கனிமொழி, என்விஎன் சோமு ஆகியோரும் வாசனின் பேச்சை ஆதரிப்பதாக அவையில் குறிப்பிட்டனா். திமுக வெளிநடப்பு: நாடாளுமன்றக்குளிா்காலக்கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு, தமிழக மழை, வெள்ளச் சேதம் குறித்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கக் கோருவோம் என்று நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு தெரிவித்திருந்தாா்.ஆனால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆதரவாக மாநிலங்களவையில் இடையூறு செய்து காங்கிரஸ் கட்சியோடு வெளிநடப்பு செய்தது திமுக.
இதே போன்று மக்களவையிலும் காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று, டி.ஆா். பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சொந்த மாநில நலன் குறித்து மாநிலங்களவையில் நமது தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பேசுகிறார் அவர் என்ன பேசுகிறார் என்பது கூட அறியாமல் தொடக்கம் முதலே குறுக்கிட்டு இடையூறு அளித்த திமுக எம்பி கள் இறுதியில் வாசன் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்து பல்டி அடித்த சம்பவம் மாநிலங்களவையில் அரங்கேறியுள்ளது. உரையாடல் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.