Tamilnadu

அன்னபூரணிக்கு அடுத்த சிக்கல் இந்த முறை அரசு எப்படி இறந்தார் என்ற தகவல்?!

Annapurani
Annapurani

தன்னை கடவுளாக அறிவித்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணி அரசு என்ற பெண் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வரும் சூழலில் தற்போது புது வழக்கு ஒன்றிணை பதிவு செய்ய கலாச்சார பெண்கள் குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளனகடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வந்த அன்னபூரணி என்ற திடீர் சாமியாரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது குழுவுடன் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளை பெற்ற ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்து வந்த அன்னப்பூரணி, 10 வருடங்கள் கழித்து சாமியாராக மாறியிருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம்ஆனால், தன்னை பராசக்தியின் அவதாரம் என்று அவர் கூறிக்கொள்வதை சில இந்துக்கள் அமைப்பு விரும்பவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தகாத உறவு பஞ்சாயத்துக்கு வந்த அன்னபூரணி, வேறொரு பெண்ணின் கணவரை விட்டுக்கொடுக்க விரும்பாமல் இருந்தார்.


மேலும், இரண்டு பிள்ளைகளின் தந்தையை அபகரிக்க முயன்றது மட்டுமில்லாமல், தனது கணவரை என்னிடம் கொடுத்துவிடு என்று பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கெஞ்சியும் அன்னபூரணியால் அதை ஏற்க முடியவில்லை. தனது ஆசையை தியாகம் செய்ய முடியாத ஒருவர் சாமியாராக ஆனதுமட்டுமின்றி, நான்தான் அம்பாளின் அவதாரம் என்று சொல்லிக்கொள்வதுஇந்துஅமைப்புகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக போலி சாமியார் அன்னபூரணி செயல்பட்டு வருவதாககூறி செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

முன்னதாக அன்னபூரணி அனுமதியின்றி செங்கல்பட்டில் சிறப்பு பூஜையை நடத்த திட்டமிட்டிருப்பதாக போலீசார் விசாரணை நடத்தி அந்த பூஜைக்கு தடை விதித்திருந்தனர் இந்த சூழலில் அன்னபூரணியின் இரண்டாவது கணவன் அரசு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மர்ம மான முறையில் மரணம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் அதுகுறித்தும் காவல்துறை விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க போலி சாமியார் அன்னபூரணி வெளியிட்ட வீடியோ காட்சியில் பங்கேற்கும் பெண்கள் தவறான செயல்களுக்கு ஈடுபடுத்த படுகிறார்களா என்று விசாரணை நடத்த வேண்டும் எனவும், மேலும் தமிழகத்தில் பல இடங்களில் அன்னபூரணி சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் விரைவில் அன்னபூரணி கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவரது இரண்டாவது கணவர் அரசு மர்ம மரணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.