பாரதி பாஸ்கர் பட்டிமன்றம் யாராவது என் கணக்கில் 15 லட்சருபாய் போட்டிருந்தால் கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன் என்று பேசியது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை உண்டாக்கிய நிலையில் இதுகுறித்து வெங்கட் கிருஷ்ணன் என்பவர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அது பின்வருமாறு :-உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.2 நாட்கள் முன்பு சன் டி.வி யில் ஒளிபரப்பான பட்டி மன்றம் பேச்சை வைத்து நான் ஒரு பதிவிட்டிருந்தேன்.அதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் Don't jump to conclusion என்றதால் 2 நாட்கள் எப்படியோ தேடிப்பார்த்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிந்தன.
முதலில் 25/12/2021 அன்று திருமதி பாரதி பாஸ்கர் பட்டிமன்றம் நிகழ்ச்சியிலேயே பங்கேற்கவில்லை என்று தெரிந்தது. இந்தக்குழப்பத்திற்கு காரணமென்ன?இந்த சன் டி.வியின் promo வீடியோ 25/12/2021 2 நாட்கள் முன்பிருந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பபட்டது. அதாவது 25/12/2021 கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று காண்பித்திருக்கிறார்கள்.அதில் திருமதி பாரதி பாஸ்கர் கிண்டலாக " யாராவது என் கணக்கில் 15 லட்சருபாய் போட்டிருந்தால் கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்" என்பது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.
அப்போ அதைப் பார்த்திருக்கும் எல்லோரும் பாரதி பாஸ்கர் உடல்நலம் தேறி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார் என்றுதானே நினைப்பார்கள்? சன் டி.வி ,உண்மையில் பாரதி பாஸ்கர் பங்கேற்காத கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுபோல், வேறு ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியை ஒரு அறிவிப்புமில்லாது ஒளிபரப்பிய காரணம் என்ன? அதுவும் அந்த 15 லட்சரூபாய் விவகாரம் எல்லோருக்கும் எரிச்சல் மூட்டியது. திருமதி பாரதி பாஸ்கர் அவ்வாறு பேசியது, அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள முடியாது. காரணம்.
1. பாரதி பாஸ்கர் படிப்பறிவு மிக்கவர். ஒரு வங்கியில் வேலை செய்பவர். எனவே அதன் உள் அர்த்தம் தெரிந்துதான் பேசுயிருக்கவேண்டும். 2. அவர்கள் மோடியைச் சொல்லவில்லை என்று யாரும் சொல்ல முடியாது 5 லட்சம் சொல்லியிருக்கலாம், 10 லட்சம் சொல்லியிருக்கலாம். ஏன் 15 லட்சம் என்று சொல்ல வேண்டும். சொல்லிவிட்டு மக்கள் கை தட்டி ரசிப்பதற்கு இடைவெளி ஏன் விட வேண்டும். அப்படியென்றால் இதன் பின்னனியில் யாரோ இருக்கிறார்கள். அது யார்?
சரி இப்போது அவருடயை ஆத்ம நண்பர் பட்டி மன்றம் ராஜாவைப் பற்றி பார்ப்போம்.இவரது முழுப்பெயர் Simson Raja இவரும் மோகன் சி லாசரஸ் அவர்களும் நெருங்கிய நண்பர்கள். லாசரஸ்ஸினுடைய Jesus Redeems என்னும் You tube channel பாருங்கள். அவருடைய பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருப்பது தெரியும். இனிமேல்தான் அதிர்ச்சி. அவருடைய பல பட்டி மன்றங்களில் பாரதி பாஸ்கரும் கலந்து கொண்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது. சரி பட்டி மன்றம் தானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அவர் நடத்தும் நிகழ்ச்சிகளெல்லாம் கிறித்துவ மதத்தைப் பற்றியது, யேசுவின் புகழ் பாடப்படுவது.
திருமதி பாரதி பாஸ்கர் உடல் நலம் முடியாமல் போனதும் 1 மணி நேரத்தில் மோகன் சி.லாசரஸ் ஒரு பிரத்தியோக ஜெபக்கூட்டம் தன் யு டியூப் சானல் வாயிலாக வெளியிடுகிறார் ( வீடியோ டவுன் லோட் செய்ய முடியவில்லை. அதை செய்ய முடியாதவாறு என்கிரிப்ட் செய்திருக்கிறார்கள். ஸ்க்ரீன் ஷாட் போட்டிருக்கிறேன். உடனே அதைப் பார்க்கவும்) அதில் லாசரஸ் சொல்கிறார் " சகோதரி பாரதி பாஸ்கரன் அவர்கள் நமது யேசுவுக்கு ஊழியம் செய்யும் விதமாக பல பட்டி மன்றங்களில் பேசியிருக்கிறார். பைபிளைப் படித்துவிட்டு வந்து பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அவர் உடல் நலம் பெற ஜெபம் செய்யுங்கள் என்கிறார்.
இப்போது இன்னொரு ஸ்க்ரீன்ஷாட் போட்டிருக்கிறேன். அந்த வீடியோவையும் Jesus Redeems youtube channel லில் பார்க்கவும். அது இந்த 25/12.2021 ம்தேதி Jesus Redeems நடத்திய பட்டி மன்றம். அதற்கு நடுவர் யார் தெரியுமா? சாட்சாத் நம்ம ராஜாதான். அவருடைய துவக்க உரையை முழுமையாகக்கேளுங்கள். அதில் பேச்சார்களை அறிமுகப்படுத்தும்போது ராஜா இரு இந்து மதத்தைச் சார்ந்த பேச்சாளர்களை அறிமுகப்படுத்துகிறார். அதில் அவர் என்ன சொல்கிறாரென்றால் " பிரதர் லாசரஸ் பிற சமயப்பேச்சாளர்களை அழைத்துவரக்கோரியதால் இவ்விருவரையும் அழைத்து வந்திருக்கிறேன். இருவரும் பைபிளை நன்கு படித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால் பாரதி பாஸ்கரையும் இதுபோல்தான் அறிமுகம் செய்திருப்பாரோ என்னும் சந்தேகம் எழுகிறதல்லவா?அதே உரையில் அவர் " பிரதர் மோகன் சி.லாசரஸ் பாரதி பாஸ்கர் உடநிலையைப் பற்றிக் கேள்விப்படதும் 1 மணி நேரத்தில் ஜெபக் கூட்டம் ஏற்பாடு செய்து உலகம் முழுவதும் பிராத்தனை செய்தார்கள். அதில் கர்நாடகாவிலிருந்து பாரதி பாஸ்கரைதெரியாதவர்கள் கூட பிரதர் சொன்னதால் வேண்டியிருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இன்னும் ஒரு படி மேலே போய் பிரதர் பேச்சை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பேர்கள் கேட்கிறார்கள், அவர் எங்கள் பேச்சைக் கேட்க இங்கு முன்னால் அமர்ந்திருக்கிறார் என்கிறார்.
அதனால்தான் திருமதி பாரதி பாஸ்கர் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கும் வீடியோவில் ( வெளியிட்டது பட்டிமன்றம் ராஜா யூடியூப் சேனல்) மோகன் சி.லாசரஸையும் குறிப்பிட்டு பாரதிபாஸ்கர் யார் என்று தெரியாதவர்களும் பிராத்தனை செய்ததற்கு நன்றி கூறியிருக்கிறார். இப்போது எல்லாப்புள்ளிகளையும் இணைத்து நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள், முடிவும் செய்துகொள்ளுங்கள். சிலகாலமாக சன் டி.வி பட்டி மன்றங்களில் பங்கேற்கும் ராஜா, பாரதி, மோடி அரசை, அரசின் திட்டங்களை Sarcastic காக கமெண்ட் செய்வதும் நகைச்சுவையாக கிண்டலடிப்பதும் அதற்கு நடுவர் சாலமன் பாப்பையா கிண்டலாக பதில் கொடுப்பதும் யார் கொடுக்கும் தைரியம் என்பதும் புரிகிறது.
இது தெரியாமல் நாம் கை தட்டி ரசிக்கிறோம். நான் இனி இவர்களின் பேச்சைக் கேட்பதாக இல்லை என தெரிவித்துள்ளார் வெங்கட் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சூழலில் இந்த தகவல் உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது, இதுகுறித்து பாரதி பாஸ்கர் தரப்பு விளக்கம் அளிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.