Tamilnadu

திமுக எய்த அடுத்த அம்பும் "புஸ்வனமானது".. வெளிவந்தது அடுத்த பகிர் தகவல்!

Annamalai and Stallin
Annamalai and Stallin

தமிழகத்தின் சார்பில் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் ஊர்த்தியை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தமிழக ஊடகங்கள், திமுகவினர், திமுக கூட்டணி கட்சியினர் மிக பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்தனர், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.


இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஊர்த்தியை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறார்கள் என பரப்ப படும் செய்தி போலி, முதலில் இதனை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, பாதுகாப்பு கமிட்டி முடிவு செய்யும் எனவும் இது போன்று கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டி காட்டினார், அண்ணாமலை தெரிவித்த பின்புதான் இப்படி ஒரு நடைமுறை இருக்கிறது என்பதே பலருக்கு தெரியவந்துள்ளது.

இந்தசூழலில் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அவை பின்வருமாறு :-  இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக சுதந்திர  போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். நமக்கும் தமிழக ஊர்தி இடம்பெறாதது  வருத்தமளிக்கிறது. அதற்கான  காரணம் குறித்து ஆராய்ந்த போது 'தமிழக அரசே' முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியை தருகிறது.

ஒவ்வொரு வருடமும் அனைத்து மாநிலங்களும் இந்த பேரணியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கும், அதற்கான திட்டங்களை மேற்கொள்ளும். ஊர்திகளை வடிவமைக்கும். பாதுகாப்பு துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளில் சிறப்பான சிலவற்றை தேர்ந்தெடுத்து ஊர்வலத்தில் பங்கு பெற செய்யும். இது தான் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை உள்ள நடை முறை. இதற்கு முன்னர் தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கூட  குடியரசு தின பேரணியில் தமிழக ஊர்திகள் இடம்பெறாது இருந்தது உண்டு.


பாதுகாப்பு துறை அமைச்சகமானது, பல்வேறு துறைகளின்  நிபுணர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் ஊர்திகளை தேர்ந்தெடுக்கும். இந்த குழுவில், கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனக்கலை ஆகிய துறைகளின் நிபுணர்கள் இடம்பெறுவார்கள். இந்த குழு பல முறை சந்தித்து அணிவகுப்பில் இடம்பெறும் சிறந்த ஊர்திகளை தேர்வு செய்வார்கள்.

இக்குழுவானது முதலில் வடிவமைப்பை ஆய்வு செய்து அதில் திருத்தங்களை செய்து மாற்றங்கள் தேவையெனில் ஆலோசிக்கப்படும். அந்த வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அம்மாநில அதிகாரிகள் முப்பரிமாணத்தில் தங்களின் மாதிரியை விளக்குவார்கள். மீண்டும் அந்த குழு ஆய்வு செய்து இறுதி தேர்வுக்கு முன்னெடுத்து செல்லும்.

அழகான ஒளி தோற்றம், மக்கள் மனதில் பதிவது போன்ற காட்சியமைப்பு, வடிவமைப்பின் எண்ண ஓட்டம், அதனுடன் உள்ள இசை ஆகிய பல்வேறு காரணிகளோடு, இவைகளின் முழு விவரங்களையும் விரிவாக விளக்கமளித்த பின் இறுதி தேர்வு செய்யப்படும். அதிகாரபூர்வ பிரதிநிதிகள் மட்டுமே இந்த குழுவுடன் இணைந்து செயல்பட முடியும். 

ஆக, எந்த மாநிலங்கள் சிறப்பான தயாரிப்பை வடிவமைத்து முன்வைத்ததோ, அந்த மாநிலங்கள் அந்த வருட அணிவகுப்பில் தேர்வு பெற்று இடம்பெறும் என்பதே நடைமுறை. அதனடிப்படையில் இந்த வருடம் தமிழகம் சரியான முறையில் நம் மாநில ஊர்திகளை காட்சிப்படுத்த தவறிவிட்டது என்பதே கண்கூடு. ஆனால், இந்த நடைமுறை தெரியாமல் வழக்கம் போல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று மீண்டும் மீண்டும் மலிவு அரசியலை செய்வது அழகல்ல. தமிழக முதல்வர் இந்த நடைமுறையை மறந்து விட்டாரா? அல்லது அவருக்கு அதிகாரிகள் இதை தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டார்களா? 

எது எப்படி இருந்தாலும், இதையே ஒரு பாடமாக கொண்டு அடுத்த வருடம் சிறப்பான வடிவமைப்பை கொண்டு நமது மாநில ஊர்தியை  பேரணியில் இடம் பெற வைக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை. அதை விடுத்தது யாரோ சொன்ன ஆதாரபூர்வமற்ற கருத்துகளை பொறுப்புள்ள சிலர் பொது வெளியில் பொறுப்பற்ற முறையில் வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த சூழலில் மத்திய அரசு மீது மாநில அரசு வீண் பழி சுமத்தியது தெரியவந்துள்ளது மட்டுமல்லாமல் சில ஊடகங்களும் உண்மையை சொல்ல மறுத்தது ஏன் என்ற கேள்வியும் பொது வெளியில் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இதில் கொடுமை என்ன வென்றால் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் நடைபெற்ற 2008-2011 காலகட்டத்தில் 3 முறை தமிழகத்திற்கு வாய்ப்பே வழங்கவில்லை என்ற அதிகாரபூர்வ தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் ஊர்தியை வைத்து அரசியல் செய்ய நினைத்து தற்போது தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுள்ளது திமுக ஏன் 2008-2011 காலகட்டத்தில் நமது தமிழக ஊர்தி பங்குபெறவில்லை அதற்கான காரணம் என்ன? திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும் ஏன் பங்கேற்க முடியாமல் போனது என மொத்தத்தில் வெளுத்து எடுத்து வருகின்றனர் பாஜக அதிமுக மற்றும் பாமகவினர்.