Tamilnadu

சிறுமி கொலை வழக்கில் வெளியான அடுத்த மர்மம் நாகூர் ஹனிபாவின் செயல் வெளியானது? எங்கே அந்த கனிமொழி ஜோதிமணி!

Nagore Haniba and  Kanimozhi Jyotimani
Nagore Haniba and Kanimozhi Jyotimani

இந்தியாவில் வட மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழகத்தை சேர்ந்த சிலர் காலம் காலமாக பேசுவது உண்டு, மேலும் எங்கோ வடமாநிலத்தில் ஒரு பெண்ணிற்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் கட்சிகள் அமைப்புகள் தமிழகத்தில் உண்டு.


அந்த வகையில் வட மாநிலங்களில் நடைபெற்ற குற்ற செயல்களை மிஞ்சும் வகையில் ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி இருக்கும் சூழலில் தமிழக அரசியல் வாதிகள், பெண்ணியவாதிகள், தமிழக ஊடகங்கள் வாய் மூடி மவுனமாக இருப்பது பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர்இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்று முன்தினம் நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு:-

நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை என் நண்பர்  வீட்டிற்கு அழைத்து சென்றேன். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன். இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன்.

இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன். பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன்.

இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன். ஆனால் நான் அதை சாப்பிடவில்லை.அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்.இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில் சிறுமியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து தும்பைப்பட்டிக்கு சென்று விட்டனர்.

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் தும்பைப்பட்டியில் சிறுமியின் வீட்டு முன்பு திரண்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. சிறுமி முக்குலத்தோர் சமுகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் நம்மை தாக்க நேரிடும் இனி மதுரையில் வசிக்க முடியாது மேலும் சிறுமி என்பதால் நிச்சயம் கைது செய்து விடுவார்கள் என ஹனிப்பாவின் தாயார்கூறியதை தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து இருந்ததாகவும் ஆனால் ஹனிபா என்பவன் விஷம் சாப்பிடாமல் சிறுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, தமிழகத்தில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை சம்பவமே விடை கிடைக்காத நிலையில் இப்போது மற்றொரு சிறுமி காதல் போர்வையில் முஸ்லீம் இளைஞர் குடும்பமே கூட்டு சதி செய்து உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதேனும் தவறு நடந்தால் போராட்டம் ஆர்ப்பாட்டம் ஆளுநர் மாளிகை முற்றுகை என செல்லும் கனிமொழி, ஜோதிமணி போன்றோர் தமிழகத்தை சேர்ந்த சிறுமி கூட்டு சதி மூலம் கொலை செய்யபட்டு இருப்பது குறித்து இது வரை வாய் திறக்காதது அரசியல் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

More Watch Videos