உக்ரைன் நாட்டில் தமிழர்களை மீட்க தமிழக அரசு குழு அமைத்தது கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான நிலையில் இது குறித்து துக்ளக் சத்யா தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வரும் ராஜரீக நடவடிக்கையால் ஏற்கெனவே பல ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் நான்காயிரம் பேருக்கு மேல் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். மற்ற நாடுகளை விட இந்திய அரசு எடுத்து வரும் இந்த முயற்சிக்கு அதிக பலன் கிடைப்பதற்கு காரணம் , பிற நாடுகளுடன் பிரதமர் கடைப்பிடித்து வரும் இணக்கமான அணுகு முறையே.
இந்நிலையில் , தமிழக அரசே ஒரு மீட்புக்குழுவை அமைத்து அதன் மூலம் தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசின் உதவியைக் கேட்பது கேலிக்கூத்தான நடவடிக்கை. மத்திய அரசால் மீட்கப்பட்டு விட்ட மாணவர்களை இந்திய விமான நிலையத்திலிருந்து மீண்டும் மீட்பது என்ன சாதனை என்று புரியவில்லை.
இப்பணிக்காக சில கோடிகளை ஒதுக்கியிருப்பது வீண் செலவு. இக்குழு மத்திய அரசின் அனுமதி பெற்று பிற நாடுகளுக்குப் பயணித்து, உக்ரைனிலிருந்து வெளியேறி அங்கு வந்து சேரும் மாணவர்களை மீட்கப்போவதாக கூறுவது, விலலனுடன் ஹீரோ மோதும்போது காமடியனும் குறுக்கே வந்து சண்டையிடுவதைப்போன்றதுதான்.
தங்களது ஏடாகூடமான நடவடிக்கையால் இக்குழு எங்கேயாவது சிக்கிக் கொண்டால் அவர்களையும் இந்திய வெளி விவகாரத் துறைதான் காப்பாற்ற வேண்டும்.
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வைகோ போட் எடுத்துக்கொண்டு வீரமாக சென்றதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. தமிழகத்தில் செய்ய வேண்டியதே நிறைய இருக்க, பொருத்தம் அற்ற விஷயங்களில் தலையிடுவது தேவைதானா எனவும் துக்ளக் சத்யா கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து தமிழக அரசு ஆளுநர் விவகாரம், உக்ரைன் விவகாரம் என அடுத்தடுத்து அதிகாரத்திற்கு மிஞ்சிய செயலில் ஈடுபட்டு பின்பு மூக்கு உடைப்படுவது தொடர்கதையாக மாறி வருகிறது.