Tamilnadu

ஒரே சட்டம் ஆரம்ப நிலையிலேயே கதற தொடங்கிய திருமா..! மொத்தமும் போச்சு!!!

Thirumavalan on upset
Thirumavalan on upset

கள்ள ஒட்டு போடுவதை தடுக்கவும் ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்களிப்பதை தடுக்கும் விதமாக மத்திய அரசு தேர்தல் நடைமுறையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்த சூழலில் அதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும் என திருமாவளவன் பேட்டி கொடுத்து இருக்கும் சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில்,  தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்.  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேர்தல் சீர்திருத்த மசோதாவில், ஆதார் எண்ணுடன் (Aadhaar Card) வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID) இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனினும், இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படாது. இந்த இணைப்பு தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதா நாடாளுமன்றத்தின் நடப்பு  குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதுஇந்த மசோதா மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். 

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேர்தல் சீர்திருத்த மசோதாவில், ஆதார் எண்ணுடன் (Aadhaar Card) வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID) இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனினும், இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படாது. இந்த இணைப்பு தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தற்போது பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் நடைபெற்று  வரும் நிலையில்,  இனி தேர்தல் ஆணையம், தேதலுக்கான வாக்குபதிவை நடத்த எந்த கட்டிடத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என்பது இந்த மசோதாவில் உள்ள மற்றொரு முக்கிய அம்சமாகும்.

எனவே, வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள், என எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்புகள் வழங்கப்படும். 

இந்த மசோதா நாளை மக்களவையில்   தாக்கல் செய்யப்பட இருக்கிறது இந்த சூழலில் திருமாவளவன் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார், பல்வேறு மசோதக்களை தாக்கல் செய்தாலும், இந்த மசோதவை தாக்கல் செய்வதை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுக்க கூடிய கோரிக்கை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட வேண்டும்.இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்னோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது. இது மிகவும் ஆபத்தானது, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு இது ஏதுவாக அமைந்துவிடும். எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா, இதை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.

ஆனால் திருமாவளவன் அழைப்பை எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை மாறாக தேர்தல் சீர்திருத்த அரசியலை எதிர்த்து குரல் கொடுத்தால் நம் கட்சி மீது களங்கம் உண்டாகலாம் என்பதால் அனைத்து கட்சிகளும் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது, மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யும் மசோதா திருமாவளவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றால் அது நிச்சயம் நன்மை பயக்கும் சட்டமாக இருக்கும் என பாஜகவினர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.