Tamilnadu

ஒரே உத்தரவு நடு நடுங்கி போன எதிர்க்கட்சிகள் என்ன செய்ய போகிறது திமுக அரசாங்கம்!

modi and stalin
modi and stalin

பெட்ரோல் டீசல் மீதான விலையை அதிரடியாக மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்கள் மேலும் விலையை அதிரடியாக குறைத்து வருகின்றன, இதனால் பெட்ரோல் விலையை வைத்து அரசியல் செய்யலாம் என இருந்து காங்கிரஸ் கூட்டணி அரசுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.


பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அரசு விலையை குறைத்தது போக அதிரடியாக மேலும் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர், இதனால் தமிழகம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. 

கர்நாடகாவில் பெட்ரோல் விலை தற்போதுலிட்டர் ரூ.95.90 பைசாவும், டீசல் லி்ட்டர் ரூ.81.50 ஆகவும் விற்கப்படுகிறது. மத்திய அரசின் உற்பத்தி வரிக் குறைப்பின் எதிரொலியாக, பெட்ரோல் டீசல் இரண்டிலும் லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை ட்விட்டரில் பதிவி்ட்ட செய்தியில் “ நம்முடைய பிரதமர் மோடி தேசத்துக்கு மிகஅற்புதமானதீபாவளிப் பரிசாக பெட்ரோல், டீசல் மீதான விலைக் குறைத்து அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக கர்நாடக அரசும் பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்திலும் பெட்ரோல் லிட்டருக்கு வாட் வரி 7 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. மாநில தலைமைச் செயலாளர் நவ்நீத் சாஹல் கூறுகையில் “ பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு உற்பத்திவரியைக் குறைத்துள்ளது.

இதன்பலனை மக்களுக்கு உ.பி. அரசு வழங்கும். இதன்படி, டீசல் லிட்டருக்கு வாட் வரியிலிருந்து 2 ரூபாயும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படுகிறது. இதனால் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் குறையும்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. முதல் பிப்லப்குமார் தேவ் ட்விட்டரில் பதிவிட்ட அறிவிப்பில், “ பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வரியையும் திரிபுரா அரசு குறைக்கிறது. இதன்படி நாளை முதல் பெட்ரோல், டீசல் மீதான விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

அசாம் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான விைலக் குறைப்பை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்துள்ளது. பிரதமர் மோடியின் முடிவுக்கு இணங்கி, அசாம் அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் அதிகபட்சம் கோவா மாநிலத்தில் அதிகபட்சமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விடுத்த அறிவிப்பில், “ மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்துள்ளதால் நாங்களும் வாட் வரிையக் குறைக்கிறோம். இதன்படி கோவாவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ.7 குறைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாயும், டீசல் விலை ரூ17ம் குறையும். இதுநாளை(இன்று) நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடியோடு மத்திய அரசு நிற்காது எனவும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலிற்குள் பெட்ரோல் டீசல் ஆகியவை GST வரம்பிற்குள் கொண்டுவரப்படும் எனவும் தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. மத்திய அரசை எதிர்க்க பெட்ரோல் டீசல் விலை உயர்வை பயன்படுத்தி பிரச்சாரங்களை வகுக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து வந்த சூழலில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அறிவிப்பின் மூலம் எதிர்க்கட்சிகளின் திட்டத்தில் மண்ணள்ளி போட்டுள்ளது பாஜக அரசு.

தற்போது பாஜக ஆளும் மாநிலங்களை போன்று தமிழகத்திலும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என அழுத்தம் உண்டாகி இருப்பதால், பெட்ரோல் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு திமுக அரசு தள்ளப்பட்டுள்ளது, நிதி வருவாய் பற்றாக்குறையில் சிக்கி இருக்கும் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் மேலும் பட்ஜெட்டில் துண்டு விழும்..,

அதே நேரத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை என்றால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் என்ன செய்வது என ஆழ்ந்த யோசனையில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் விலை குறைத்தால் நிச்சயம் தமிழகத்திலும் பெட்ரோல் விலை குறைப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.