சென்னை வெள்ள சேத நிலவரம் குறித்து எதிர்க்கட்சியான அதிமுக, `சென்னையின் தற்போதைய நிலைக்கு ஆளும் திமுக அரசுதான் காரணம்’ எனவும் ஆளும் திமுக அரசு, `முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகளே இந்த வெள்ளத்துக்குக் காரணம்’ என்றும் மாறி மாறிக் குறைகளை அடுக்கி வருகின்றனர் .
விடாது கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடான சென்னையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என பலரும் தங்கள் பணிகளை செய்துவருகின்றனர்.
2015-க்கு புயல் வெள்ளத்திற்கு பிறகு, சென்னை மிக அதிக கனமழையால் வெள்ளக்காடாக மூழ்கிப்போயிருக்கிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீர்நிலைகள் நிரம்பி, மக்கள் வசிப்பிடங்களுக்குள் பாய்ந்திருக்கின்றன.
இன்னும் சில நாள்களுக்குச் சென்னையில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுமுனைப்புடன் களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், 2015 மழை வெள்ளச் சேதத்துக்குப் பிறகு, தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் கடுமையாகச் சாடி தன் அதிருப்தியை வெளிப்படுத்தி யிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
மக்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் இந்த சூழலில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த முறை சென்னையின் மைய பகுதிகளில் ஒன்றான தியாகராய நகர் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்து உள்ளது இதற்கு முக்கிய காரணம் செயற்கையாக கட்டிட இடிபாடு பொருட்களை கொட்டியதே என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் ஆங்கில ஊடகத்தில் பணிபுரியும் கோமல் கெளதம் காலை 9:30க்கு இது ஒரு இயற்கை வெள்ள மல்ல மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என குறிப்பிட்டுள்ளார்,மாம்பலம் கால்வாய் வழியே தங்கள் கனரக வாகனங்கள் செல்லவேண்டும் என்பதற்காக காண்டிராக்டர்கள் 1.7 கிமீ தூரத்துக்கு குப்பையை (debris) போட்டு நிரப்பியிருக்கிறார்கள் எனவும்,
ஆனால் வேலை முடிந்த பின்பு அதை நீக்காமல் விட்டதால் மழை நீர் வடிய வாய்ப்பில்லாமல் போனது. இதன் காரணமாக அந்தப்பகுதி முழுக்க வெள்ளக்காடு" ஆக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கஉடனடியாக மொத்த மாநகராட்சி அதிகாரிகளும் மாம்பலத்தில் ஆக்கிரம்புகளை அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர்.
ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியில் சென்னை மக்கள் இருப்பதால் டிசம்பரில் மாநகராட்சி தேர்தலை நடத்தலாம் என இருந்த ஆளும் கட்சி வட்டாரம் மாநகராட்சி தேர்தலை தள்ளிப்போட தற்போது முடிவு செய்துள்ளதாம்.