தமிழக ஆளுநர் ரவி சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிரடியாக தனது நிகழ்வுகளை ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ பக்கம் மூலம் தமிழில் பதிவு செய்து வருகிறார் குறிப்பாக கடந்த ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் சமூக வலைத்தளங்களில் இல்லாத சூழலில் தற்போதைய ஆளுநர் ரவி ட்விட்டரில் கலக்கி வருவதுடன் தமிழிலும் கருத்தை பதிவிட்டு அனைத்து தரப்பிற்கும் தனது கருத்துக்களை தெரியும் வண்ணம் காட்சி படுத்தி வருகிறார்.
இந்த சூழலில் இன்று ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ட்விட்களை பகிர்ந்து வருகின்றனர் அவை பின்வருமாறு :- தமிழ்நாடுஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும்,
அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்எனவும்
மற்றொரு பதிவில் தமிழ் நாடு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ் நாடு முதலமைச்சர், திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தொலைபேசியில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையினால் ஏற்பட்ட பாதிப்புகள், மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கலந்துரையாடினர் எனவும்.,
மேலும் தமிழ் நாடு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல், S.N.பிரதான் அவர்களிடம் கனமழை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். NDRF-ன் 14 பட்டாலியன்கள் மற்றும் அதிக படைகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார் எனவும்
மாண்புமிகு பிரதமர், திரு நரேந்திர மோடி,மாண்புமிகு உள்துறை அமைச்சர், திரு அமித் ஷா ஆகியோருக்கு தமிழ் நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் எனவும் அடுத்தடுத்து ட்விட்கள் மூலம் ஆளுநர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவலை மக்களுக்கு சொல்லியுள்ளது ஆளுநர் மாளிகை.
இந்த சூழலில் துணை வேந்தர்கள் தேர்வு குழுவில் தொடங்கி, துறையிரீதியிலான ஆய்வுகள் என அதிரடி காட்டி வந்த ஆளுநர் தற்போது மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அரசு எடுக்க கூடிய நடவடிக்கை குறித்து தகவலை முதல்வரிடம் கேட்டறிந்து வருவதால் ஆட்டிற்கு தாடியும், ஆட்சிக்கு ஆளுநரும் எதற்கு என கேட்டவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.