தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தினார் என ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து தெலுங்கானாவில் என்ன நடைபெற்றது என்பது குறித்து விளக்கமாக பதிவு செய்து விளக்கம் அளித்து இருக்கிறார் எழுத்தாளர் சுந்தரராஜ சோழன்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது :- தெலுங்கானா முதல்வர் KCR,சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர் என்று சென்ற வருடம் பாராட்டினார் ஆளுநர் டாக்டர் தமிழிசை அவர்கள், KCR க்கும் மோடிக்கும் இடையே இன்னும் கூட நல்லுறவு இருப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன்..ஆனால் தெலுங்கானா மாநில அரசியல் சொல்வது என்ன?
பண்டி சஞ்சய் தலைமையிலான பாஜகவோ KCR ன் பேட்டைக்குள்ளே புகுந்து அடித்தது.அவரது கட்சி ஆட்களை உடைத்து உள்ளே எடுத்தது.அங்கு நடந்த இடைத்தேர்தலை எல்லாம் மோடி பிரதமராகும் தேர்தல் போல சந்தித்து,தெலுங்கானாவின் இறை போல வீற்றிருக்கும் சந்திர சேகர ராவினை மண்ணை கவ்வ வைத்தது..தெலுங்கானாவில் ரண கொடூரமாக அரசியல் செய்கிறது பாஜக.நாக்கை அறுத்து விடுவோம்,கையை வெட்டி விடுவோம் என்று இரண்டு கட்சி தலைவர்களும் யுத்தகளமாக மாற்றுகிறார்கள் அரசியல் களத்தை..
2019 தேர்தல் நேரத்தில் ஒரு கார்ட்டூன் வந்தது.அதாவது,விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அமித்ஷா வளைந்து குனிந்து தனது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது போலவும்,வெறும் 3 மாநில தேர்தல் தீர்ப்பை பார்த்த ராகுல் அலட்சியமாக கூட்டணி பேச்சுவார்த்தை செய்வது போலவும் வரைந்திருந்தார்கள் இது பல செய்திகளை சொல்லும்.
காங்கிரஸின் தவறுகளில் பாடம் படித்து வந்த கட்சி பாஜக.மக்களின் மனநிலையை,அதிகாரத்தின் அங்கங்களை துல்லியமாக உணர்ந்தவர்கள் இந்த புரவியை ஓட்டுகிறார்கள்.தயவு செய்து ஒருநாள் சோஷியல் மீடியாவில் போஸ்ட்டாக அரசியலை பார்க்காதீர்கள் அது ஏமாற்றத்தை மட்டுமே தரும், பேசுகிற வார்த்தைகளோ,சவால்களோ மட்டுமே களத்தை தீர்மானிப்பதில்லை.நாம் யானையை தடவும் குருடன் அவ்வளவுதான்.சரத்பவார்,மம்தா,லல்லு,முலாயம் எல்லோரோடும் இறுதி யுத்தம் போலதான் பாஜக தேர்தல் களத்தில் நிற்கிறது.ஆனால் இவர்களோடு மோடி எப்படி நடந்துகொள்கிறார் என்று பார்த்தாலே பாஜகவினுடைய அரசியல் வேறு வகையானது என புரிந்துகொள்ள முடியும்.
நீண்ட காலமாக எம்ஜிஆர் Vs கருணாநிதி,அதை விட மூர்க்கமாக ஜெயலலிதா Vs கருணாநிதி என்ற அரசியலையே பார்த்துவிட்டோம்.நமது அரசியல் உணர்ச்சி வேறு,பாஜகவின் அரசியல் உயிர்மூச்சு வேறு.அது ஆயுதம் கிடைக்கும் வரை விலங்கோடு சமரசம் பேசுவோம் என்ற வழிமுறையை பின்பற்றும்..வெறும் 2 இடங்களில் இருந்து 300 இடங்களை அடைந்து காங்கிரஸ் என்ற மாபெரும் கட்சியை இல்லாமலாக்கி வருகிறது.
கடந்த 50 வருடத்தில் மிகப்பெரிய தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.அதே போல 50 வருடத்துக்கு மேலாக திராவிடம் என்கிற தத்துவம் கும்மிடிப்பூண்டிக்கு வடக்கே நகர முடியவில்லை.தமிழகத்திலே கூட அதனால் கூட்டணி இல்லாமல் வெல்ல முடியாது.ஆனால்,பாஜகவால் மட்டும் எப்படி தன் எல்லையை விஸ்தாரணம் செய்து கொண்டே வர முடிந்தது என்று சிந்தியுங்கள் யாருக்கு பொறுமையும்,புத்திகூர்மையும் உள்ளதோ அவன் ஆட்டத்தை வெல்வான் என குறிப்பிட்டுள்ளார்.
சுருக்கமாக சொல்வது என்னவென்றால் ஆளுநர் பாராட்டினார் என்ற செய்திக்கு பின்னர் தான் சந்திர சேகர ராவ் உடன் தீவிரமாக மோதியது பாஜக அதே போல் தமிழகத்திலும் ஆட்டம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். credit - sundararaja cholan