24 special

திட்டமிட்டு ரிலீஸ் செய்த ஆடியோ! யாரென கண்டுபிடித்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை!

Trichy suriya, annamalai
Trichy suriya, annamalai

தமிழக அரசியலில் திமுக பாஜக இடையேயான அரசியல் மோதல் தொடர்ந்து கொண்டு இருந்த நேரத்தில் பாஜக உட்கட்சி விவகாரம் திடீர் என விஸ்வரூபம் பெற்றது அதில் காயத்ரி ராகுராம் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்தது ஒரு புறம் என்றால் மற்றொரு பக்கம் பாஜக மாநில சிறுபான்மை அணி தலைவர் டெய்சி தங்கையா மற்றும் திருச்சி சூர்யா இடையே செப்போனில் நடந்த வாக்குவாதம்.


சூர்யா சிவா மற்றும் டெய்சி போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை நாளை தாக்கல் செய்ய கூறி இருக்கிறார், திருச்சியில் சிறுபான்மை அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கும், திருச்சி சூர்யா இருவருக்கும் இடையே நடந்த வாக்கு வாதத்தின் தொடர்ச்சியாகதான் டெய்சி மற்றும் சூர்யா சிவா இடையே செப்போனில் வாக்கு வாதம் வெடித்து இருக்கிறதாம்.

இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த அண்ணாமலை ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கேட்டு இருக்கிறார் இதற்கு இடையில் கட்சியின் உள் விவாகரத்தை யார் பொது வெளியில் ஊடகத்திடம் ஆடியோவை கொடுத்தது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது, இந்த சூழலில்தான் இது குறித்து இறுதியாக யார் அந்த கரும் புள்ளி என்பதையும் யார் மூலமாக ஆடியோ ஊடகத்திற்கு சென்றது என்பது எல்லாம் முழுமையாக அலசி ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கலாம்.

இதில் தேசிய அளவில் பொறுப்பில் உள்ள மற்றொரு சிறுபான்மை அமைப்பை சேர்ந்த நிர்வாகியின் பெயரும்  இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது, விரைவில் வரும் ஒருவாரத்தில் பாஜகவில் அதிரடி மாற்றங்கள் அரங்கேரும் என்றும் முக்கியமான சிலர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படலாம் என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.

இதற்கு இடையில்  தமிழக மேலிட பொறுப்பாளர்கள் கட்சியின் உள் விவாகரங்கள் குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என அனைத்து நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தி இருப்பதால் விரைவில் பாஜகவில் அதிரடி சம்பவங்கள் நிகழ்வது உறுதி என்கின்றன நமக்கு நெருக்கமான கமலாலய வட்டாரங்கள்.