நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு எத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்க, சத்தம் இல்லாமல் விஜய்யை சிக்கலில் சிக்க வைத்து இருக்கிறார்கள் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
வாரிசு படத்தின் ஒரு சில காட்சிகள் மீண்டும் மறு பதிவு செய்வதற்காக பூந்தமல்லி அருகே நடந்த படப்பிடிப்பு தளத்தில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருந்துள்ளது, அங்கு படப்பிடிப்பில் அனுமதி இன்றி யானைகளை பயன்படுத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து தனியார் ஊடகமான நியூஸ் தமிழை சேர்ந்த செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பத்திரிகையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர், ஒரு கட்டத்தில் பத்திரிகையாளரை அடித்து காரில் தூக்கி சென்ற நிலையில் கடும் பரபரப்பு எழுந்தது, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடிகர் விஜய்க்கு எதிராக திரும்பிய நிலையில், ஊடக தரப்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் பத்திரிகையாளர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஈசி ஆர் சரவணன் தலைறைவானர், இவர் தான் எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என முதலில் அடிக்க கூறியவர். இதையடுத்து மற்ற மூவரை காவல்துறையினர் கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.
சவால் விடுத்த ஈசிஆர் சரவணன் தலைமறைவாக ஆகிவிட்டார், இந்த தகவல் விஜய் காதுகளுக்கு செல்ல ஏற்கனவே வாரிசு படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர்கள் எத்தனை கிடைக்கும் என்ற பஞ்சாயத்து முடிவதற்குள் இப்போது பத்திரிகையாளர் மீதான தாக்குதல் என புது பஞ்சாயத்து வந்து இருப்பதால் நொந்து போய் அமர்ந்து இருக்கிறாராம் விஜய்.
பத்திரிகையாளர்கள் உடன் கருத்து மோதலில் ஈடுபட்ட காலம் மாறி பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலாக மாறி இருப்பதை TNNEWS24 குழுவும் வலுவான கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.