அண்ணாமலை படகில் சென்று போட்டோ சூட் நடத்துகிறார் என கிண்டல் செய்தவர்களுக்கு பாஜகவினரும் பாஜக ஆதரவாளர்களும் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அண்ணாமலையிடம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இப்படித்தான் அந்த கட்சி காரங்க வருஷம் வருஷம் வந்து பாக்குறாங்க என ஆளும் கட்சியை நோக்கி குற்றம் சுமத்த வருகிறார் ஆனால் அக்கா அதையெல்லாம் விடுங்க நமக்கு இப்போ தேவை மனிதாபிமானம்தான் நாங்க சரி செய்து கொடுக்கிறோம் என பேசியுள்ளார்.
இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது, தமிழகம் மட்டுமல்ல உலகில் அதிகாரத்திற்கு வந்த எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கேலி கிண்டலுக்கு ஆளானவர்கள்தான் ஆனால் அதன் வாயிலாக மக்களை சென்றடைந்து வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திலும் இருந்து இருக்கிறார்கள் அந்த வகையில் அண்ணாமலை இப்போது விமர்சனம் மூலமாகவும் ஏளனம் மூலமாகவும் மக்களை சென்றடைந்துவிட்டார்.
மொத்தத்தில் இந்த நேரத்தில் அரசியல் தேவையில்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியே தேவை என நேரடியாக களத்திற்கு சென்று நிவாரண பணிகளை அண்ணாமலை செய்து கொண்டு இருக்க அவரை மையமாக கொண்டு படகில் சென்றார் என கிண்டல் செய்தவர்களுக்கு அண்ணாமலையின் மனிதாபிமான பேச்சு கடும் பதிலடியாக அமைந்துள்ளது.
முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள். அடுத்து ஏளனம் செய்வார்கள். அடுத்து உங்களை கடுமையாக எதிர்ப்பார்கள், கடைசியில் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என பிரபலமான பழமொழிக்கு ஏற்ப அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை (ஆட்டம் ) தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம்.
:- உதயகுமார் செந்திவேல்