Editor choice

முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு.. வேலை செய்தது அண்ணாமலை 'மேஜிக்'

annamalai and tn cm stalin
annamalai and tn cm stalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறை செயலாளர் ஆகியோருக்கு சில உத்தரவுகளை போட்டுள்ளார் என்ற செய்தி கோட்டை வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது, இது குறித்து TNNEWS24க்கு கிடைத்த தகவலை பார்க்கலாம்.பாஜக தலைவர் அண்ணாமலை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இருவருக்கும் இடையே நடைபெற்ற ஊழல் குற்றசாட்டு புகார்கள் என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தை பார்க்காமல், சிறிது நாட்கள் முன்னோக்கி சென்றால் முதல்வரின் உத்தரவு எத்தனை முக்கியத்துவம் பெரும் என்பது தெரியும்.


தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள், மால்கள், டாஸ்மாக் போன்றவை அனைத்து நாட்களிலும் திறந்து இருக்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தபோது, ஏன் கோவில்கள் மற்றும் இதர வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு என அண்ணாமலை கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் கோவில்கள் மூடப்பட்டு உள்ளன,மத்திய அரசிடம் கடிதம் வாங்கி வாருங்கள் கோவில்களை திறக்கிறோம் என கூறினார் சேகர் பாபு.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் 5% அதிகமாக தொற்று உள்ள இடங்களில்தான் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார், தமிழகத்தில் எங்குமே தொற்று 5% தாண்டவில்லை எனவே கோவிலை, திறக்கவேண்டும், கடவுள் நம்பிக்கையற்ற உங்கள் அரசு கொள்கையை எங்கள் மீது திணிக்க கூடாது.. இன்னும் 10 நாட்களில் கோவில் திறக்கவில்லை என்றால் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.

அண்ணாமலை எச்சரிக்கையை பார்ப்போம் பார்ப்போம் என கிண்டல் செய்தார் அமைச்சர் சேகர் பாபு, ஆனால் இரண்டு நாட்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது , அதே போன்று செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றசாட்டை முன்வைத்தார் அண்ணாமலை, தனியார் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு 4% கமிஷன் வாங்கி கொண்டு பணத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.எந்த ஊழலும் நடைபெறவில்லை அண்ணாமலை கொடுத்தது ஆதரமமே இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில்,  அண்ணாமலை குறிப்பிட்ட கமிஷன் வாங்கியதாக சொல்லப்பட்ட நிறுவனத்தில் கமிஷன் பெறப்பட்டதா என சிபிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர், இதன் பின்னணியில் பல்வேறு உண்மை தகவல்கள் கிடைத்துள்ளன.

அடுத்தது அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான ஊழல் புகார், தீபாவளிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக வெளியான டெண்டரில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக டெண்டர் வழங்க விதிமுறையில் மாற்றங்களை கொண்டுவந்து இருப்பதாகவும் செய்தி வெளியான நிலையில் அண்ணாமலை இந்த சம்பவம் குறித்து ஏன் 100 கோடி அளவு வியாபாரம் செய்தவர்கள் மட்டும்தான் டெண்டரில் பங்கேற்க வேண்டும் என விதிமுறைகளை மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு அமைச்சர், தீபாவளி இனிப்புகள் வழங்கும் டெண்டரை அரசு நிறுவனமான ஆவினுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார், இது மிகுந்த முக்கியத்துவம் உரியதாக பார்க்க படுகிறது, ஏன் என்றால் அமைச்சர் ஒருவர் எடுத்த முடிவு சரியானது இல்லை என முதல்வர் தலையிட்டு மாற்றம் நடைபெறுகிறது என்றால் அங்கு ஊழல் நடக்க முகாந்திரம் இருப்பதாக ஸ்டாலினுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றே அர்த்தம்.

இதற்கு முன்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், gst கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டதற்கு வளைகாப்பு நிகழ்ச்சி இருந்தது என குறிப்பிட்டது கடும் சர்ச்சையான நிலையில், பல்வேறு கண்டனங்கள் எழுந்தன, மேலும் அவர் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சொந்த கட்சி எம்பி ஒருவரை தவறாக பேசியது ஆகியவை இதுதான் நாகரீகமா? என பத்திரிகையாளர் மணி போன்றவர்கள் கண்டிக்கும் சூழல் உண்டானது.

மேலும் பிரபல தனியார் பத்திரிகை விகடன் சமீபத்தில் வெளியிட்ட அட்டைப்படம் ஒன்றும் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது ,இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களுக்கும் தனது உதவியாளர்கள் மூலம் தகவல் ஒன்றை அளித்துள்ளார், ஆட்சி அமைத்து 6 மாதத்திற்குள் இது போன்று ஊழல் புகார்கள், சர்ச்சைகள் ஆகியவை ஏற்படுவது 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த இயக்கத்திற்கு நல்லது இல்லை.

இனி அரசு விவகாரங்களில் அரசு துறை செயலர் மூலம் டெண்டர்கள் ஆகியவை குறித்து முன்பே எனது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அதன் பிறகு டெண்டர் போன்ற விவகாரங்களில் உறவினர்களை ஈடுபடுத்த கூடாது மீறினால் ஒரு முறை இரு முறை பார்ப்பேன் அதன் பிறகு அமைச்சரவையில் இடம் கிடையாது எனவும் தெளிவாக கூறி இருக்கிறார்.ஊடகங்களை அரசியல் ரீதியாக சந்தித்து பேட்டி கொடுப்பதை தவிர்க்குமாறும் துறைசார்ந்த தகவல்களை மட்டுமே பேசுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த தகவல்தான் தற்போது பேசுபொருளாக கோட்டை வட்டாரத்தில் இருக்கிறது என TNNEWS24க்கு தகவல் கிடைத்துள்ளது, எதிர்க்கட்சியான அதிமுகவை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மூலம் மாதம் ஒரு அமைச்சர் என ரைடு நடத்திவரும் ஆளும் கட்சியான திமுகவிற்கு, அண்ணாமலை கண்ணில் விரலை விட்டு ஆட்ட தொடங்கியுள்ளார், அதிலும் சில அமைச்சர்கள் இப்போது அண்ணாமலை பெயரை கேட்டாலே 'அலற' தொடங்கிவிட்டார்கலாம்.