Editor choice

ஆளுநரும் குழு அமைக்க போகிறாரா? என்ன திட்டம் அதிரடியாக களம் இறங்கும் குழுக்களில் யார் யார்?

tn governor and tn cm
tn governor and tn cm

TNNEWS24 ஊடக உறவுகளுக்கு வணக்கம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ள சம்பவம், ஆளுநருக்கு துறை ரீதியாக நடைபெறும் பணிகள் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் அதற்காக அனைத்து துறை செயலாளர்களும் தயாராக இருக்குமாறும் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு சுற்று அறிக்கை வெளியிட்டார்.


இந்த சுற்று அறிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் இன்னும் பிற திமுக கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர், இந்தசூழலில்தான் தலைமை செயலாளர் இறையன்பு விளக்கம் ஒன்றை கொடுத்தார் அதில் புதிய ஆளுநருக்கு துறை ரீதியாக விளக்கம் கொடுப்பது வழக்கமான நடைமுறைதான் எனவும், இதனை சர்ச்சை ஆக்கவேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஊடகங்களில் நேற்றைய தினம் ஆளுநரின் செயல்பாடு அரசியல் சட்டம் கொடுத்துள்ள உரிமையா? விதி மீராளா என ? பல்வேறு முக்கிய ஊடகங்கள் விவாதம் நடத்தினர் இந்நிலையில் என்னதான் நடக்கிறது என ஆளுநர் மாளிகை தரப்பில் TNNEWS24 க்கு கிடைத்த தகவல் பின்வருமாறு :-ஆட்டுக்கு தாடியும் ஆளுநரும் எதற்கு என அண்ணா கேட்ட கேள்வியை சிலர் பழமொழியாக சொல்லலாம் ஆனால் ஆளுநரின் அதிகாரம் என்ன என்று ஆளும் கட்சியான திமுகவிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றாக தெரியும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு வந்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின்.

ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை சந்தித்து 97 பக்க ஊழல் புகார் ஒன்றை கொடுத்தார், மேலும் ஆளுநருக்கு, ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட அதிகாரம் இருப்பதாகவும் ஸ்டாலினே தனது வாயால் குறிப்பிட்டுள்ளார் அப்படி இருக்கையில் ஆளுநருக்கு எந்த அதிகாரமுமில்லை என சொல்வது தவறு.தற்போதைய ஆளுநர் ரவியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து எந்த வித புகாரையும் யாரும் கொடுக்கவில்லை அதே, நேரத்தில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு சாதகமாக அரசு அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு இப்போதே சுருட்டி வருவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக பாஜகவினர், அதிமுகவினர், ஊழல் ஒழிப்பு இயங்கங்கள், பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் என பட்டியலே நீண்டுள்ளது, இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் நிதிநிலைமை டெண்டர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் தான் ஆளுநர் துறை ரீதியாக அறிக்கை கேட்டுள்ளார்.

இந்த அறிக்கை வெள்ளை அறிக்கைக்கு சமம் என்பதால் ஆளுநரிடம் அதிகாரிகள் கொடுக்க போகும் பைல்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்க படுகிறது , இதில் துறை ரீதியாக தனக்கு வந்த புகார்கள் ஆகியவற்றை அதிகாரிகள் அதிகார பூர்வமாக கொடுக்கும் பைல்களுடன் ஒப்பிட்டு பார்க்க போகிறாராம் ஆளுநர்.

இதில் ஒரு வேலை ஊழல் குற்றசாட்டுகள் நிரூபணம் ஆனால், ஆளுநர் சம்பந்தபட்ட துறை மீது ஊழல் விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும்  ஆளுநர் மாளிகை வாட்டாரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன, ஒரு வேலை ஆளுநர் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால் கடந்த ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தெரிவித்த விளக்கத்தையே கொடுக்க இருக்கிறார்களாம்.

ஸ்டாலின் ஆளுநருக்கு ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் 22 அன்று கூறியது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தான் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, ஸ்வீட் வாங்க தனியாருக்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலினே ஆவினில் இனிப்புகளை வாங்கலாம் என உத்தரவு போட்டுள்ளார்.

விரைவில் தமிழக அரசு சார்பில் சுபவீ தலைமையில் அமைக்கப்பட்ட சமூக நீதி குழு, ஜெயரஞ்சன் தலைமையில் பொருளாதார வளர்ச்சி குழு மற்றும் வெளிநாட்டு நபர்களை கொண்டு அரசுக்கு பொருளாதார ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட குழு,  என பல்வேறு குழுக்கள் செயல்பாடு குறித்தும் அவர்களின் சம்பளம் செலவு குறித்து ஆராய ஆளுநர் ஒரு தனி குழு அமைத்தாலும் ஆச்சர்ய பட வாய்ப்பு இல்லை என்கின்றன ராஜ்பவன் வட்டாரங்கள்.

இதற்கு எல்லாம் வாய்ப்பு இருக்கிறதா என கேட்டால்... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் கருத்தை கேட்காமல் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் சூராப்பாவை நியமனம் செய்தார் என ஊடகங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்தும் எப்படி மாறி மாறி விவாதமும் அறிவுரையும் செய்தன, ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக அரசின் கீழ் கோவையில் செய்யப்பட்டுவரும் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வுசெய்வதற்காக இந்திய வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் லட்சுமண் சிங் ரத்தோர் தலைமையில் மூன்று பேர் அடங்கிய தேடல் குழுவை அமைத்து வேந்தர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்துல் கரீம், ஆசிய - பசிபிக் தேங்காய் மேம்பாட்டுக் கழக முன்னாள் சிறப்பு இயக்குநர் பொன்னையா ரத்தினம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் . சூரப்பா விவகாரத்தில் அப்போதைய ஆளுநரை கடுமையாக எதிர்த்த திமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்தும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை அல்லது ஊடகங்களோ விவாதம் நடத்தவில்லை. என்பதில்தான் இருக்கின்றன அத்தனை அரசியல் பதில்களும்.

தொடர்ந்து இது போன்ற முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள உங்கள் TNNEWS24 உடன் இணைந்து இருக்கவும், நாளை வேறொரு முக்கிய தகவலுடன் உங்களை சந்திக்கின்றோம்.